நாட்டின் பல பிரதேசங்களில் இடம்பெற்ற விபத்துக்களில் நால்வர் பலி!

#SriLanka #Accident
Thamilini
1 year ago
நாட்டின் பல பிரதேசங்களில் இடம்பெற்ற விபத்துக்களில் நால்வர் பலி!

நாட்டின்பல பிரதேசங்களில் இடம்பெற்ற 04 வீதி விபத்துக்களில் நால்வர் உயிரிழந்துள்ளனர். 

 நேற்று (17) ஹலவத்தை, களுத்துறை வடக்கு, வெல்லவாய மற்றும் அஹலியகொட பொலிஸ் பிரிவுகளில் விபத்துக்கள் இடம்பெற்றுள்ளன. 

 ஹலவத்தை - கொழும்பு பிரதான வீதியின் மஹாவெவ பகுதியில் எதிர் திசையில் இருந்து வந்த மோட்டார் சைக்கிள் மீது வேன் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் மற்றும் அவரது மகள் படுகாயமடைந்துள்ளதுடன், மாரவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் சாரதி உயிரிழந்துள்ளார். 

இதேவேளை, களுத்துறை – ஹொரணை வீதியின் கல்பத்த பிரதேசத்தில் சாரதி ஒருவர் துவிச்சக்கரவண்டியை கட்டுப்படுத்த முடியாமல் எதிர்திசையில் வந்த மோட்டார் சைக்கிளுடன் மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது. 

 விபத்தில் சைக்கிளில் பயணித்தவர் படுகாயமடைந்து கல்பத்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மேலதிக சிகிச்சைக்காக ஹொரண வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார். களுத்துறை வடக்கு, கல்பாத்த பகுதியைச் சேர்ந்த 83 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். 

 அரட வெல்லவாய தனமல்வில வீதியின் ஹந்தபனகல பிரதேசத்தில் இராணுவ ஜீப் வண்டியுடன் மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். தெள்ளுல்ல, அட்டாலிவெவ பிரதேசத்தில் வசிக்கும் 64 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். 

 இதேவேளை, கொழும்பு – இரத்தினபுரி பிரதான வீதியின் மரகெலே வத்த பகுதியில் வீதியைக் கடந்த பாதசாரிகள் மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்தில் படுகாயமடைந்த பாதசாரி மற்றும் சைக்கிள் ஓட்டுநர் அஹலியகொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளனர். பெரனபாவ, பரகடுவ பிரதேசத்தில் வசிக்கும் 49 வயதுடைய நபர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4