வரி விகிதத்தில் ஏற்பட்டுள்ள மாற்றம் : குறைந்த வருமானம் பெறுபவர்களுக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை!

#SriLanka #Tax
Thamilini
1 year ago
வரி விகிதத்தில் ஏற்பட்டுள்ள மாற்றம் : குறைந்த வருமானம் பெறுபவர்களுக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை!

 6 சதவீத வரிக்கு உட்படும் வகையில் தனி நபர் வருமான வரியின் முதலாவது பிரிவை மாற்றியமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அனுரகுமரா திஸாநாயக்க தெரிவித்துள்ளார். 

பாராளுமன்றத்தில் இன்று (18.12) உரையாற்றிய அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். 

இதன்போது மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர்.  வரி வரம்பு ஒரு இலட்சத்திற்கு மேல் காணப்பட்டது. எங்களால் அதை 150,000 ஆக உயர்த்த முடிந்தது. 

 மேலும், தனிநபர் வருமான வரியின் 1ஆவது வகையின் திருத்தத்தை 500,000 முதல் 10 இலட்சம் ரூபா வரையில் 6% வரிக்கு உட்பட்டதாக மாற்ற முடிந்தது.

 அதன்படி, மாதம் 150,000 ரூபா சம்பளம் பெறுபவர் 100% வரி விலக்கு. 200,000 சம்பாதிக்கும் நபருக்கு 71% வரியிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. 250,000 ரூபா சம்பளம் பெறுபவருக்கு 61% வரியிலிருந்து விலக்கு அளிக்கப்படும்.

 300,000 ரூபா சம்பளம் பெறுபவருக்கு 47% வரியிலிருந்து விலக்கு அளிக்கப்படும். 350,000 ரூபா சம்பளம் பெறுபவருக்கு 25.5% வரியிலிருந்து விலக்கு அளிக்கப்படும்.

 அதிக வருமானம் பெறுபவர்களுக்கு குறைந்த நிவாரணம் மற்றும் குறைந்த வருமானம் பெறுபவர்களுக்கு அதிக நிவாரணம் என நாம் உழைக்கும் போது செலுத்தும் வரி திருத்தத்தில் வெற்றி பெற்றோம் என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.  

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4