உங்கள் பெயரை கூட்டினால் கூட்டு எண் 16 வருகிறதா? இது உங்களுக்கான பதிவு

#people #Lanka4 #Numerology
Prasu
3 months ago
உங்கள் பெயரை கூட்டினால் கூட்டு எண் 16 வருகிறதா? இது உங்களுக்கான பதிவு

இந்த எண்ணை அறிவின் ஆட்சி பீடம் என கூறலாம். இந்த எண்ணை பெயரில் கொண்டவர்களின் நாவில் சரஸ்வதி தேவி தண்டவமாடுவாள். 

உலக எண் கணித மேதை சீரோ இந்த எண்ணை இடிந்த கோட்டை என்று வர்ணித்துள்ளார், அனுபவத்தில் இது உண்மையாகவே காணப்படுகிறது. 

இந்த பதினாறாம் எண் ஒரு தனி மனிதனின் பெயரில் வந்தாலும் அல்லது ஒரு நிறுவனத்தின் பெயரில் வந்தால் ஆரம்பத்தில் மிக வேகமான முன்னேற்றத்தையும் பிறகு திடீரென ஒரு பெரிய சரிவயையும் தரக்கூடியது. 

உலக சுகம் பொருள் பதவி வாக்கு வன்மை கலைகளின் மூலம் மற்றவர் மனதை கவர்தல் சாத்திரங்களின் மீது விருப்பங்கள் போன்றவை இந்த பதினாறாம் எண்ணுக்கு கொடுக்கப்பட்டுள்ள தனி சிறப்புகளாகும். 

அதிகப்படியான ஆசைகளை விட்டு ஞான மார்க்கத்தில் சென்றால் சரி தேவியின் அருள் கடாட்சம் கிடைக்கும். 

சூரியனுடைய சக்தியும் சுக்ரனுடைய சக்தியும் இணைந்து கேது பகவானின் ஆதிக்க தன்மையை உணர்த்துவதால் இந்த எண் ஆக்க சக்தியையும் , அதே சமயத்தில் அழிவு சக்தியையும் குறிக்ககூடிய எண்ணாகும்.

ஒரு தனி மனிதனின் பெயர் எண்ணாகவும் , பிரமிடு எண்ணாகவும் இந்த பதினாறாம் எண் வரும்பொழுது இல்லற வாழ்வும் புத்திர பாக்கியம் ஏற்படுவதிலும் குறையை காட்டும். ஆபத்துக்கள் எந்த நேரத்திலும் இந்த எண்ணினருக்கு வரும்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!