சிங்கள புத்தாண்டுக்கு முன்னதாக உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்த தீர்மானம்!

#SriLanka #Election #AnuraKumaraDissanayake
Thamilini
1 year ago
சிங்கள புத்தாண்டுக்கு முன்னதாக உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்த தீர்மானம்!

எதிர்வரும் சிங்கள புத்தாண்டுக்கு முன்னதாக உள்ளூராட்சி சபைத் தேர்தல் நடத்தப்படும் என ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். 

 அதற்கான வேட்புமனுக்களை மீள அழைப்பது தொடர்பான சட்டமூலம் தற்போது தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். 

 மல்வத்து மற்றும் அஸ்கிரி மகான தேரரை நேற்று (20) பிற்பகல் தரிசனம் செய்து ஆசீர்வாதம் பெற்றுக்கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார். 

 “உள்ளாட்சி தேர்தலை மார்ச் 2023ல் நடத்த வேட்புமனுக்கள் கோரப்பட்டன. ஆனால் அப்போது இருந்த கட்சிகள் இன்று இல்லை. சில கூட்டணிகள் உடைந்துள்ளன. 

எனவே வேட்புமனுவை ரத்து செய்துவிட்டு புதிய வேட்புமனுக்களை கோர வேண்டும் என்று நினைக்கிறோம்.

 எனவே அண்மையில் அமைச்சரவையில் தீர்மானம் எடுத்து தற்போது நியமனம் செய்துள்ளோம் இரத்துச் செய்வது தொடர்பான சட்டமூலம் தயாரிக்கப்பட்டு அது ஜனவரி மாதம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு அதன் பின்னர் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவோம். 

அதற்கான ஏற்பாடுகள் முன்கூட்டியே செய்யப்பட்டு வருகிறது" என்றார். இதேவேளை, மாகாண சபைத் தேர்தல் பல பிரச்சினைகளுக்குள் சிக்கித் தவிப்பதாகவும், அதனால்தான் அடுத்த வருடத்திற்குள் தேர்தல் நடத்தப்படும் எனவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4