வருமான வரி தொடர்பான ஜனாதிபதியின் முடிவு வரவேற்கத்தக்கது - தொழில் வல்லுநர்கள்!

#SriLanka #taxes
Thamilini
1 year ago
வருமான வரி தொடர்பான ஜனாதிபதியின் முடிவு வரவேற்கத்தக்கது - தொழில் வல்லுநர்கள்!

வருமான வரி தொடர்பான ஜனாதிபதியின் முடிவு மகிழ்ச்சி அளிப்பதாக தொழில் வல்லுநர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் பொதுச் செயலாளர் பிரபாத் சுகததாச, தொழில் நிபுணரின் சம்பள வரி விதிப்பினால் அண்மைக்காலமாக பெருந்தொகையான தொழில் வல்லுநர்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர்.

மேலும், இந்த வரி விதிப்பால் தொழில் வல்லுநர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இதனால் பல்வேறு போராட்டங்கள், வேலை நிறுத்தப் போராட்டங்களை கூட நடத்த வேண்டிய நிலை ஏற்பட்டதாகவும் அவர் கூறினார். 

 தற்போதைய அரசாங்கம் இந்த வரி வரம்பை அதிகரிப்பதற்கான தீர்மானம் தொழில் வல்லுனர்களின் பிரச்சினைகள் தொடர்பில் அவதானம் செலுத்தி அவர்களின் பிரச்சினைகளை சிந்தித்து எடுக்கப்பட்ட தீர்மானமாகும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 

இதன் காரணமாக தொழில் வல்லுநர்கள் ஒன்றிணைந்து ஜனாதிபதியுடன் கலந்துரையாடி இந்த வரி முறையை நியாயப்படுத்துவதுடன் எதிர்காலத்தில் வரி முறையை தளர்த்துவதற்கான வழி மற்றும் தற்போதுள்ள வரி முறையை நியாயப்படுத்த எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அறிந்து கொள்ளவுள்ளதாக அவர் தெரிவித்தார். 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4