நாட்டின் பல பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு!

#SriLanka #weather
Thamilini
1 year ago
நாட்டின் பல பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு!

இரவில் மேல், சப்ரகமுவ, தென் மற்றும் ஊவா மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி மற்றும் அம்பாறை மாவட்டங்களிலும் பரவலாக மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. 

 வடக்கு மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும் அனுராதபுரம் மாவட்டத்திலும் சிறிதளவு மழை பெய்யக்கூடும் என திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. 

  இடியுடன் கூடிய மழை  தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களை குறைத்துக்கொள்ள தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4