கடற்பகுதிகளை அண்மித்து வாழும் மக்களுக்கு எச்சரிக்கை!

#SriLanka #Sea
Thamilini
1 year ago
கடற்பகுதிகளை அண்மித்து வாழும் மக்களுக்கு எச்சரிக்கை!

பல பகுதிகளில் ஆழ்கடல் பகுதிகளில் பணிபுரியும் பல நாள் படகுகளுக்கு எச்சரிக்கை அறிவிப்பை வெளியிட வளிமண்டலவியல் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது. 

 மேற்கு, மத்திய மற்றும் வங்காள விரிகுடா கடற்பரப்புகளில் காற்றின் வேகம் மணிக்கு 55-60 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடும் என திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

 இதன் காரணமாக கடற்பரப்புகள் அவ்வப்போது கொந்தளிப்புடன் காணப்படுவதுடன் அந்த கடற்பரப்புகளை அண்மித்த பகுதிகளில் பலத்த மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில்  கடற்பரப்பைச் சூழவுள்ள கடற்றொழில் மற்றும் கடல்சார் நடவடிக்கைகளில் ஈடுபடும் சமூகம் இது தொடர்பில் அவதானம் செலுத்துமாறு திணைக்களம் கேட்டுக்கொள்கின்றது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4