மீகொட துப்பாக்கிச்சூட்டு சம்பவம் தொடர்பில் மேலும் சந்தேகநபர்கள் கைது!

#SriLanka #GunShoot
Thamilini
1 year ago
மீகொட  துப்பாக்கிச்சூட்டு சம்பவம் தொடர்பில் மேலும் சந்தேகநபர்கள் கைது!

கடந்த 14ஆம் திகதி மீகொட பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு மற்றும் படுகொலைச் சம்பவம் தொடர்பில் மேலும் இருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். 

 இந்தக் கொலைச் சம்பவம் தொடர்பில் மேல் மாகாண தெற்கு குற்றத்தடுப்புப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். 

 அதன்படி கடந்த 19ஆம் திகதி இந்தக் குற்றச் செயலில் ஈடுபட்ட துப்பாக்கிச் சூடு நடத்தியவரையும் அதற்கு உதவிய சந்தேக நபரையும் கைது செய்ததுடன், 22ஆம் திகதி மேலும் மூன்று சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டனர். 

 குறித்த சந்தேக நபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது தெரியவந்த தகவலின் பிரகாரம், இக்குற்றத்துடன் தொடர்புடைய மேலும் இரு சந்தேகநபர்கள் நேற்று (23) மாலை மெகொட பொலிஸ் பிரிவில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 26 மற்றும் 33 வயதுடைய மீகொட பிரதேசத்தை சேர்ந்தவர்கள். மேற்படி குற்றச்செயலுக்கு உறுதுணையாக இருந்த குற்றச்சாட்டில் இருவரும் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். 

 மேலும், சந்தேகநபர் ஒருவர் தெரிவித்த தகவலின் அடிப்படையில் மீகொட குருந்துவத்தை வீதியில் ஓவிதக கரையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 9எம்எம் துப்பாக்கி மற்றும் 10 ரவைகளை பொலிசார் கண்டுபிடித்துள்ளனர். 

 சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேல் மாகாண தெற்கு குற்றத்தடுப்பு பிரிவினரும், மெகொட பொலிஸாரும் மேற்கொண்டு வருகின்றனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4