உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் திருத்தச் சட்டமூலம் தேர்தல் ஆணைக்குழுவிற்கு அனுப்பிவைப்பு!

#SriLanka #Election
Thamilini
1 year ago
உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் திருத்தச் சட்டமூலம் தேர்தல் ஆணைக்குழுவிற்கு அனுப்பிவைப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் திருத்தச் சட்டமூலம் பொதுநிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சினால் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி சபைத் தேர்தலில் வேட்புமனுக்களை இரத்து செய்வதற்கு அமைச்சரவை எடுத்த தீர்மானம் குறித்தும் தமக்கு சுட்டிக்காட்டப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

உள்ளுராட்சி மன்ற தேர்தல் சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்பட்டதன் பின்னரே தேர்தல் திகதியை அறிவிக்க முடியும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.எல்.ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

இந்நிகழ்வுகள் இடம்பெற்றவுடன் தேர்தல் திகதி அறிவிக்கப்படும் எனவும், எதிர்வரும் சிங்கள, தமிழ் புத்தாண்டுக்கு முன்னர் உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்துவதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ள முடியும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4