தீமைகள் அழிய பிரத்யங்கிரா தேவியை பில்லி, சூனியம் நீங்க வழிபடுங்கள்

#people #Lanka4 #Spirituality
Prasu
1 month ago
தீமைகள் அழிய பிரத்யங்கிரா தேவியை பில்லி, சூனியம் நீங்க வழிபடுங்கள்

ஆவணிச் செவ்வாயில், பிரத்தியங்கிரா தேவியை மனதார வழிபடுங்கள். தீயசக்திகளில் இருந்தும் துஷ்டர்களிடம் இருந்தும் நம்மைக் காத்தருள்வாள் தேவி.

உக்கிர தேவியரில் மிக முக்கியமானவள் பிரத்தியங்கிரா தேவி. தமிழகத்தில் பிரத்தியங்கிராதேவிக்கு என கோயில்கள் குறைவுதான். 

கும்பகோணம் திருநாகேஸ்வரம் அருகில் உள்ள அய்யாவாடி அருகில், பிரத்தியங்கிராதேவிக்கு என தனிக்கோயிலே உள்ளது. இதேபோல், பிரத்தியங்கிரா தேவிக்கு சில கோயில்களில் சந்நிதி அமைந்திருக்கிறது. 

மிகவும் உக்கிரமான பிரத்தியங்கிரா தேவி, சக்தி வாய்ந்தவளும் கூட. மனித உடலும் சிம்ம முகமும் கொண்டு தீயதையெல்லாம் அழிக்கவல்லவளாகத் திகழ்கிறாள் பிரத்தியங்கிரா தேவி. ஆவணி செவ்வாயில், பிரத்தியங்கிரா தேவியை மனதார வழிபடுங்கள்.

ஸ்ரீஓம் மகாபீட பிரத்தியங்கிரா தேவ்யை நம: 

ஓம் ஸ்ரீமகாபீட பத்ரகாளி தேவ்யை நம:

எனும் மந்திரத்தைச் சொல்லி பிரத்தியங்கிரா தேவியை வழிபடுங்கள். செவ்வாய்க்கிழமையன்று ராகுகாலம் மாலை 3 முதல் 4.30 மணிவரை. இந்த நேரத்தில் வீட்டில் விளக்கேற்றுங்கள். செந்நிற மலர்கள் சூட்டி அலங்கரியுங்கள்.

ஓம் அபரஜீதாய வித்மஹே பிரத்யங்கிராய தீமஹி

தந்நோ உக்ர ப்ரசோதயாத்

எனும் பிரத்தியங்கிரா தேவியின் காயத்ரி மந்திரத்தைச் சொல்லி ஜபியுங்கள். ஆத்மார்த்தமாக வேண்டிக்கொள்ளுங்கள். 

துஷ்ட சக்திகளையெல்லாம் அண்டவிடாமல் நம்மைக் காத்தருள்வாள் தேவி. செவ்வாய்க்கிழமையன்று என்றில்லாமல், எந்தநாளும் இந்த பிரத்தியங்கிரா தேவியின் காயத்ரி மந்திரத்தைச் சொல்லி பாராயணம் செய்து வழிபடுங்கள்.

ஓம் ஹ்ரீம் யாம் கல்பயந்தினோரய க்ருதயாம் க்ரூராம் வதுரமிவே

ஹ்ராம்தம் ப்ரம்ஹணா அவநிர்ணுத்ம ப்ரத்யக் கர்த்தாரம் ச்சது

எனும் பிரத்தியங்கிரா தேவியின் மந்திரத்தைச் சொல்லி வழிபடுங்கள். இதைச் சொல்லச் சொல்ல, எம பயம் விலகும். 

மனோதிடம் பெருகும். ஆரோக்கியம் கூடும். முகத்தில் தேஜஸ் கூடும். குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும்.

 ஆவணிச் செவ்வாயில், பிரத்தியங்கிராதேவியை மனதார வழிபடுங்கள். மங்காத புகழையும் செல்வத்தையும் தந்தருள்வாள் தேவி.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!