ஹிக்கடுவயில் வெளிநாட்டவர் ஒருவர் நீரில் மூழ்கி பலி!

#SriLanka #Tourist
Thamilini
1 year ago
ஹிக்கடுவயில் வெளிநாட்டவர் ஒருவர் நீரில் மூழ்கி  பலி!

ஹிக்கடுவ, தொடந்துவ பிரதேசத்தில் கடலில் நீராடச் சென்ற வெளிநாட்டவர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

 57 வயதான இந்திய பிரஜை ஒருவரே உயிரிழந்துள்ளார். குறித்த நபர் நேற்று (25) மாலை தனது மகள், மகன் மற்றும் மற்றுமொரு நபருடன் கடலில் நீராடிக் கொண்டிருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். 

 இதன்போது, ​​பிரதேசவாசிகள் அவர்களை கரைக்கு அழைத்துச் சென்று கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதித்த போதும், அங்கு அந்த நபர் உயிரிழந்துள்ளார். 

 சடலம் கராப்பிட்டிய வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், ஹிக்கடுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4