அடுத்த வருடம் முதல் சுவிட்சர்லாந்தில் அமுலாகும் புதிய கட்டுப்பாடு

#Switzerland #government #Law #vehicle
Prasu
18 hours ago
அடுத்த வருடம் முதல் சுவிட்சர்லாந்தில் அமுலாகும் புதிய கட்டுப்பாடு

2025ஆம் ஆண்டில், சுவிட்சர்லாந்து கொண்டுவர இருக்கும் புதிய கட்டுப்பாடு ஒன்றின்படி, வாகன விதி ஒன்றை மீறும் சாரதிகளுக்கு 10,000 சுவிஸ் ஃப்ராங்குகள் வரை அபராதம் விதிக்கப்பட உள்ளதாக பெடரல் கவுன்சில் தெரிவித்துள்ளது.

2025ஆம் ஆண்டில், சுவிட்சர்லாந்து அரசு வாகன விதிகள் பலவற்றை அறிமுகம் செய்ய உள்ளது. 

அவை என்னென்ன என்று பார்க்கலாம். 2025ஆம் ஆண்டு, ஜனவரி மாதம் 1ஆம் திகதி முதல், வாகனங்கள் எழுப்பும் ஒலிகள் தொடர்பில் சில விதிகள் கொண்டுவரப்பட உள்ளன. தேவையில்லாமல் வாகனங்கள் ஒலி எழுப்பும் பட்சத்தில், சாரதிகளுக்கு 10,000 சுவிஸ் ஃப்ராங்குகள் வரை அபராதம் விதிக்கப்படலாம்.

அதே ஜனவரி மாதம் 1ஆம் திகதி முதல், அனைத்து மோட்டார் சைக்கிள்களும் ஐரோப்பிய ஒன்றியத்தின் புகை வெளியிடும் அளவு தொடர்பிலான விதிகளுக்குக் கட்டுப்படவேண்டும்.

 மார்ச் மாதம் 1ஆம் திகதி முதல், சாரதி இல்லாமல் இயங்கும் வாகனங்களை இயக்குவோர், தங்கள் மாகாணத்தின் கட்டுப்பாடுகளுக்கு இணங்க autopilot system ஒன்றை பொருத்தவேண்டும். மற்றும், அந்த வாகனங்களை பார்க் செய்தல் முதலான விடயங்கள் தொடர்பில் பல புதிய விதிகள் அறிமுகம் செய்யப்பட உள்ளன.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!