கண் திருஷ்டி அல்லது கண்ணேறு அழிய என்ன செய்ய வேண்டும்

#people #Lanka4 #Spirituality
Prasu
3 months ago
கண் திருஷ்டி அல்லது கண்ணேறு அழிய என்ன செய்ய வேண்டும்

பொறாமை மற்றும் தீய நோக்கத்துடன் ஒருவரை பார்க்கும்போது அவர்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்றும், துரதிருஷ்டம் ஏற்படும் என்றும் நம்பப்படுகிறது. 

இந்த எதிர்மறை ஆற்றல் சிறிய நோய்களில் இருந்து மிகப்பெரிய பேரழிவு நிகழ்வுகள் வரை ஏற்படுத்தக்கூடும் என நம்பும் மக்கள், தாயத்துகள், கயிறுகள் போன்றவற்றை வாங்கி கட்டிக் கொள்கிறார்கள்.

கண் திருஷ்டியை நிவரத்தி செய்வதன் முலம் தனி நபர்கள் தங்களுக்கு மன அமைதியையும், பாதுகாப்பு உணர்வையும் உறுதி செய்து கொள்ளலாம் , அதற்கான பரிகாரங்களையும் கூறுகின்றனர்.

நெற்றியில் மஞ்சள் பொட்டு : 

நெற்றியில் அல்லது புருவங்களுக்கு மத்தியில் மஞ்சள் நிற பொட்டு வைப்பது கண் பார்வையில் இருந்து பாதுகாப்பை தரும் என்று நம்பப்படுகிறது. மஞ்சள் பொட்டு தீய கண் பார்வைகளை திசை திருப்பவும், நேர்மறை சக்தியை ஊக்குவிக்கவும் பயன்படுகிறது.

கற்பூரத்தை எரித்தல் :

தீய கண் ஆற்றலை விரட்டுவதற்கு வீட்டில் கற்பூரத்தை எரிப்பதோடு, நறுமணப் புகையையும் பரப்ப வேண்டும். இதன்மூலம் வீட்டில் இருக்கும் தீய சக்திகள் வெளியேற்றப்பட்டு, வீடு சுத்தப்படுத்தப்படுகிறது. இதன்மூலம் அமைதி, செழிப்பு ஆகியவை மேலோங்கும்.

கங்கை நீர் தெளித்தல் : 

கங்கை நதியில் இருந்து கொண்டுவரப்பட்ட புனித நீரை உங்கள் இருப்பிடத்தில் தெளிப்பதன் மூலம், பிறரின் தீய கண்பார்வையில் இருந்து நீங்கள் பாதுகாக்கப்படுவீர்கள். புனிதமான நீர் எதிர்மறை சக்திகள் மற்றும் தீய அதிர்வுகளை விரட்டி, நேர்மறை ஆற்றல், அமைதி மற்றும் ஆன்மீக ஆற்றலை அதிகப்படுத்துகிறது.

கருப்பு மை பொட்டு : 

நெற்றியில் கருப்பு மை பொட்டு வைப்பது கண்பார்வையை தடுக்கும். இல்லாவிட்டால், காதுக்கு பின் பகுதியில் கருப்பு மை பொட்டு வைத்துக் கொண்டால், கண்பார்வையால் ஏற்படும் எதிர்மறை ஆற்றல் உங்களை பாதிக்காது. 

ருத்ராட்சை அணிந்து கொள்ளுதல் : 

மோசமான கண் திருஷ்டியில் இருந்து தப்பிக்க ருத்ராட்சையை அணிந்து கொள்வது மிகவும் நன்மை பயக்கும். இது தெய்வீக சக்தியுடன் ஒரு பாதுகாப்பு கவசத்தையும் உருவாக்கிறது. தீய தாக்கங்களை தடுத்து, நேர்மறையான அதிர்வுகளை ஈர்க்கிறது. 

சுத்திப் போடுதல் : 

தீய கண்பார்வையை போக்க பல காலமாக பயன்படுத்தப்படும் இந்த முறையில் கற்பூரம் அல்லது மிளகாய், உப்பு ஆகியவற்றை சுத்திப் போடுவதன் மூலம் பயன் அடையலாம். தனிநபர் அல்லது தொழில் செய்யும் இடத்தை கற்பூரத்தை சுற்றி எரித்தல் நல்லது. அதேபோல், மிளகாய், உப்பு ஆகியவற்றையும் அவ்வாறு எரிப்பதன் மூலம் கண் திருஷ்டியைப் போக்கலாம்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!