பிரான்சில் ஏழு சூதாட்ட விடுதிகளை மூட உத்தரவு

#France #money #Paris
Prasu
3 months ago
பிரான்சில் ஏழு சூதாட்ட விடுதிகளை மூட உத்தரவு

பிரான்ஸ் - பரிசில் உள்ள சூதாட்ட விடுதிகள் சிலவற்றை மூடுமாறு உத்தரவிடப்பட்டுள்ள நிலையில் மீண்டும் திறக்கப்படுவதற்குரிய கால எல்லை அறிவிக்கப்படவில்லை.

கிட்டத்தட்ட ஏழு சூதாட்ட விடுதிகள் எதிர்வரும் டிசம்பர் 31 ஆம் திகதியுடன் மூடப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த விடுதிகள் மூடப்படுவதற்கு தற்போதைய அரசியல் நெருக்கடியே காரணம் என தெரிவிக்கப்படுகிறது.

தினமும் வெற்றியாளர்களைக் கொண்ட இந்த சூதாட்ட விடுதிகளில், பல இலட்சம் யூரோக்கள் நாள் தோறும் புழக்கத்தில் இருப்பதாகவும், அவை மூடப்படுவதால் நூற்றுக்கணக்கான நபர்கள் வேலை இழப்பையும், பெரும் முதலாளிகள் நஷ்ட்டத்தையும் சந்திப்பார்கள் என தெரிவிக்கப்படுகிறது.

எனினும் சூதாட்ட விடுதிகள் மூடப்படுவது தொடர்பில் துல்லியமான காரணங்கள் எதுவும் அரச தரப்பில் தெரிவிக்கப்படவில்லை எனவும் கூறப்படுகின்றது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!