கொழும்புத் துறைமுகத்திற்கு திடீரென வந்த இந்தோனேஷியக் கப்பல்!

#SriLanka
Mayoorikka
1 year ago
கொழும்புத் துறைமுகத்திற்கு திடீரென வந்த இந்தோனேஷியக் கப்பல்!

 இந்தோனேசிய கடற்படைக்கு சொந்தமான ‘கிரி சுல்தான் இஸ்கந்தர் முடா-367’ என்ற கப்பல் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு நேற்று கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது.

 வருகை தந்த கப்பலை இலங்கை கடற்படையினர் கடற்படை மரபுகளுக்கமைய வரவேற்றனர். ‘கிரி சுல்தான் இஸ்கந்தர் முடா-367’ (‘KRI SULTAN ISKANDAR MUDA-367’ ) என்பது 90.71 மீட்டர் நீளமுள்ள 120 பணியாளர்களைக் கொண்ட கப்பல். 

 இந்த கப்பலின் கட்டளை தளபதியாக அனுகேரா அன்னுருல்லாவால் (ANUGERAH ANNURULLAH) செயற்படுகிறார். கப்பல் கொழும்பில் தங்கியிருக்கும் காலத்தில், கப்பலின் பணியாளர்கள் நாட்டிலுள்ள சில சுற்றுலாத் தலங்களுக்குச் செல்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 உத்தியோகபூர்வ விஜயத்தை முடித்துக் கொண்டு, கப்பல் டிசம்பர் 30 அன்று இலங்கையில் இருந்து புறப்பட உள்ளது. இதேவேளை 2024 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 21 ஆம் திகதி இலங்கையை வந்தடைந்த சீனக் கடற்படையின் மருத்துவமனைக் கப்பல் ‘பீஸ் ஆர்க்’ (Peace Ark) தனது முறையான விஜயத்தை வெற்றிகரமாக முடித்துக் கொண்டு நேற்று நாட்டிலிருந்து புறப்பட்டது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4