ரயில்வே துறை வெளியிட்டுள்ள சிறப்பு அறிவிப்பு : பயணிகளின் கவனத்திற்கு!

#SriLanka #Train
Dhushanthini K
2 days ago
ரயில்வே துறை வெளியிட்டுள்ள சிறப்பு அறிவிப்பு : பயணிகளின் கவனத்திற்கு!

முன்பதிவு செய்யப்பட்ட இருக்கை டிக்கெட்டுகள் மற்றும் பணத்தைத் திரும்பப் பெறுவது தொடர்பான சிறப்பு அறிவிப்பை ரயில்வே துறை வெளியிட்டுள்ளது. 

 ரயில் இருக்கைகளை முன்பதிவு செய்யும் போது பயணிகளின் தேசிய அடையாள அட்டை எண் அல்லது வெளிநாட்டு கடவுச்சீட்டு எண்ணை உள்ளிடுவது கட்டாயம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 

 ரயில் நிலையத்திற்குள் நுழைந்து ரயிலுக்குள் நுழைவுச் சீட்டைச் சரிபார்க்கும் போது டிக்கெட்டில் குறிப்பிடப்பட்டுள்ள தேசிய அடையாள அட்டை எண் அல்லது வெளிநாட்டு கடவுச்சீட்டு எண்ணை சரிபார்த்து உறுதிப்படுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது. 

 ஜனவரி 1 ஆம் திகதிமுதல் முன்பதிவு செய்யப்பட்ட இருக்கை டிக்கெட்டுகளை திரும்பப் பெற விண்ணப்பிக்கும் போது டிக்கெட் உரிமையாளரின் அடையாளத்தை உறுதிப்படுத்த பயணிகளின் தேசிய அடையாள அட்டை அல்லது வெளிநாட்டு பாஸ்போர்ட்டின் நகலை ரயில் நிலையத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!