2025 ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலம் தொடர்பான விவாதத்தை நடத்த தீர்மானம்!

#SriLanka #Parliament #budget
Thamilini
1 year ago
2025 ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலம் தொடர்பான விவாதத்தை நடத்த தீர்மானம்!

2025 ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலம் தொடர்பான விவாதம் (பட்ஜெட் விவாதம்) பெப்ரவரி மாதம் முதல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

சபாநாயகர் கலாநிதி ஜகத் விக்ரமரத்ன தலைமையில் இன்று (31) பாராளுமன்றத்தில் நடைபெற்ற நாடாளுமன்ற விவகாரங்களுக்கான குழுக் கூட்டத்தில் இந்த விடயம் தீர்மானிக்கப்பட்டுள்ளது. 

2025 ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தை 2025 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 9 ஆம் திகதி முதல் வாசிப்புக்காக பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, 2025ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு (பட்ஜெட் உரை) பெப்ரவரி 17ஆம் திகதி நடைபெறவுள்ளதுடன், இரண்டாம் வாசிப்பு விவாதம் பெப்ரவரி 18ஆம் திகதி முதல் 25ஆம் திகதி வரை 7 நாட்களுக்கு நடைபெறவுள்ளது. 

 பின்னர் பெப்ரவரி 25ஆம் திகதி மாலை 6:00 மணிக்கு வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது.

2025ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் மீதான குழு விவாதம் பெப்ரவரி 27ஆம் திகதி முதல் மார்ச் 21ஆம் திகதி வரை 4 சனிக்கிழமைகள் உட்பட 19 நாட்களுக்கு நடைபெறவுள்ளது.

அதன் பின்னர், ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் மூன்றாம் வாசிப்பை மார்ச் 21ஆம் திகதி மாலை 6:00 மணிக்கு நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4