அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

#SriLanka #weather
Thamilini
1 year ago
அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

மத்திய, ஊவா மற்றும் தென் மாகாணங்களிலும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. 

 மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். 

 வடக்கு, கிழக்கு, வடமத்திய, வடமேற்கு மற்றும் தென் மாகாணங்களில் அவ்வப்போது காற்று வீசும். (30-40) வரை பலத்த காற்று வீசக்கூடும். 

 மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களில் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 இடியுடன் கூடிய மழை  தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னலினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களை குறைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு மக்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4