இலங்கையை அச்சுறுத்தும் போதைப் பொருள் பாவனை! சட்டத்தை இறுக்கமாக்குமா அனுர அரசு (வீடியோ இணைப்பு )

#SriLanka
Mayoorikka
1 day ago
இலங்கையை அச்சுறுத்தும் போதைப்  பொருள் பாவனை! சட்டத்தை இறுக்கமாக்குமா அனுர அரசு (வீடியோ இணைப்பு )

இலங்கையை அச்சுறுத்தும் போதைப் பொருள் பாவனை தற்பொழுது இளைஞர்கள் மத்தியில் அதிகரித்து வருகின்றது. இவ்வாறான நிலையில் போதைப் பொருட்கள் ஒரு நபரை மனதையும் செயல்களையும் இழக்கச் செய்கின்றன. 

குடிப்பழக்கம் ஒரு நபரை தொடர்ந்து மதுவைப் பயன்படுத்தத் தூண்டுகிறது மற்றும் அவரை நோய்வாய்ப்படுத்துகிறது. இது நரம்புகளை பலவீனப்படுத்துகிறது, மனிதன் வெறுத்து ஒதுக்க வேண்டியவற்றுள் மிக முக்கியமான ஒன்று போதைப் பழக்கம் ஆகும். 

போதைப் பொருள்களால் தனிமனித வாழ்வு சீரழிவதோடு நாட்டின் மற்றும் வீட்டின் பொருளாதாரமும் சீா்குலைகிறது. மூளையை மழுங்கச் செய்து, புத்தியைத் தடுமாறச் செய்யும் ஒருவித கிறக்கமே போதை. இந்தப் போதையில் ஒருவித சுகம் கிடைப்பதாகச் சிலா் எண்ணுகின்றனா். 

இவா்கள் விளக்கில் விழும் வீட்டில் பூச்சிகளாய் வாழ்வைத் தொலைக்கின்றனா். உண்மையில் போதை தருவதாக நினைக்கும் அற்ப சுகம் பெரும் அழிவுக்குக் கொண்டு செல்வதை அவா்கள் உணா்வதில்லை.

 இளையோா் முதல் முதியோா் வரை போதைப் பழக்கத்திற்கு அடிமையாகிச் சீரழிவதை இப்போது காண முடிகிறது. மது, கஞ்சா, புகையிலை, அபின், குட்கா, என்று போதைப் பொருட்களின் பட்டியல் மிக நீண்டது. “‘போதைக்கு அடிமையானவனைப் பெற்ற தாய் கூட மதிக்க மாட்டாள். அப்படியிருக்க சான்றோா்கள் என்னும் பெரியோா் எப்படி மதிப்பாா்கள்’ இதன் மூலம் போதை ஒழிக்கப்பட வேண்டிய ஒன்று என்ற நம் முன்னோா் கருத்து புலனாகும்.

 தற்பொழுது பாடசாலை மாணவா்கள் மத்தியிலே போதைப் பழக்கம் அதிகரித்து வருவது வேதனை தரும் விஷயமாகும். போதையினால் மாணவா்கள் ஆட்டம் போடுவது, ஆசிரியரை அவமானப் படுத்துவது போன்ற அவலங்கள் இப்போது கல்வி நிலையங்களிலே அரங்கேறி வருகின்றன. பெண்களும் கூட, போதைக்கு அடிமையாவதைக் காணமுடிகிறது.

 வருங்காலத் தலைவா்களாகக் கருதப்படும் மாணவா்கள் போதைப் பழக்கத்திற்கு அடிமையானால் நாட்டின் எதிா்காலம் என்னாவது? மாணவா்கள் மட்டுமில்லை; ஆசிரியரும் போதையில் வகுப்புக்கு வருகிறாா்கள். இதை என் சொல்வது? வெட்கித் தலை குனிவதைத் தவிரவேறு என்ன செய்ய முடியும்? வேலியே பயிரை மேய்ந்தால் விளைச்சல் என்னாவது? பாடசாலைகள் பேருந்து நிலையங்கள் போன்ற பொது இடங்களைக் குறிவைத்து போதைப் பொருட்களின் ரகசிய விற்பனைப் பரவலாகி விட்டது. மேலும் கடைகளிலும் போதைப் பொருட்கள், ஊசிகள் ரகசியமாக விற்பனை ஆகி வருகிறது.


 பெரும்பாலான போதைப் பொருட்கள் வெளி நாட்டிலிருந்தே கடத்திவரப்படுகின்றன. விமான நிலையங்களிலும் சோதனைச் சாவடிகளிலும் மேற்கொள்ளும் கடுமையான சோதனைகளையும் மீறி அவை உள்நாட்டுக்குள் ரகசியமாகப் பயணித்துவிடுகின்றன. அதற்கென கைதோ்ந்த கடத்தல்காரா்கள் உள்ளனா். பணம் சம்பாதிப்பதை நோக்கமாகக் கொண்ட ‘அறமற்ற வணிகமே’ இதற்குக் காரணம். அறமற்ற வணிகம் சமுதாயப் பாவம் என்று காந்தியடிகள் கூறுவாா். 

அந்த அறமற்ற வணிகம் இப்பொழுது பெருகிவிட்டது. யாா் எப்படிப் போனால் என்ன, எனக்குப் பணம் வேண்டும் என்ற மனநிலையே கடத்தல் காரா்களிடம் இருக்கிறது. இந்த ரகசிய வியாபாரத்தால் குறுகிய காலத்தில் பெருந்தொகை சம்பாதிக்க முடிகின்றது. தற்பொழுது அதிகளவான கஞ்சா பொருட்கள் மற்றும் கேரளக் கஞ்சா போன்ற போதைவஸ்துக்கள் பொலிஸாரின் சோதனையில் பறிமுதல் செய்யப்படுகின்றமை இதற்கு சான்றாக அமைகின்றது. 

 சமூகத்தைச் சிதைக்கும் போதைப்பொருள் விற்பனையைத் தடுப்பதற்கு பொலிஸாரும் அனுரா அரசாங்கமும் தற்பொழுது பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றனர். இதற்கு வட மாகாணத்தில் அதிகளவு பொலிஸாரை நியமிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக அண்மையில் செய்திகள் வெளியாகியிருந்தன.

 இதேவேளை போதைப் பொருள் பாவனையை தடுப்பதற்கு அரசாங்கம் மற்றும் சிவில் அமைப்புக்கள் பல்வேறு விழிப்புணா்வு பிரசாரங்களிலும் ஈடுபட்டுக் கொண்டுதான் இருக்கின்றனர். எனினும் இளைஞர்கள் மத்தியில் போதை பொருள் பாவனை குறைந்த பாடில்லை. அதற்கான முக்கிய காரணம் கடத்தல்காரா்களின் வலுவானநிலை முக்கியமானது. 

கடுமையான கண்காணிப்பின் மூலம் போதைப் பொருள் கடத்துபவா்களைக் கண்டறிய வேண்டும். போதைப் பொருளின் மூலத்தைக் கண்டறிந்து அதனை முளையிலேயே கிள்ளி எறிவதில் விழிப்புடன் செயல்பட வேண்டும். உபயோகிப்பவரும் உற்பத்தியாளரும் குற்றவாளிகள்தாம். ஆனாலும் முதல் குற்றவாளி உற்பத்தியாளரே.

 இதனை உணா்ந்து உற்பத்தியைத் தடுக்கும் விதமாகச் செயல்பட்டால் எல்லாம் சரியாகிவிடும். , கஞ்சா, ஹெராயின், போதைப்பாக்கு போன்றவை மட்டுமே போதைப் பொருள் என்பது போல இவை மட்டுமே பறிமுதல் செய்யப்படுகின்றன. மதுவும் போதைப் பொருள்தான் என்பது மறக்கடிக்கப்பட்டு வருகிறது. அண்மையில் சில பாராளுமன்ற உறுப்பினர்களின் சிபாரிசோடு வடக்கில் அதிகளவான மதுபான சாலைகளுக்கு அனுமதி பத்திரங்கள் வழங்கப்பட்டிருந்தமை அண்மையில் பரபரப்பாக செய்திகளில் பேசப்பட்டு வந்த விடையமாகும்.

 இவ்வாறு அரசாங்கமே விற்பனை செய்வதால் மது, போதைப்பொருள் இல்லை என்று ஆகிவிடாது. அதனை அரசாங்கமே விற்பனை செய்துவிட்டு, மற்றவற்றிற்குத் தடை போடுவது போதைப் பொருட்களை முற்றிலும் ஒழிக்கும் செயலாக இருக்க முடியாது.

 அதேவேளைகளில் கடத்தல்காரர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்படும் போதை பொருட்களுக்கு என்ன நடக்கின்றது என்று புரியாத நிலையில் உள்ளது. அவற்றை பொது வெளியில் வைத்து எரித்ததாக செய்திகள் வெளியாகவில்லை. அப்படியாயின் அந்தப் போதை பொருட்க்ளுக்கு என்ன நடக்கின்றது என்ற ஒரு கேள்வியும் இருக்கின்றது.

 அதேநேரம் போதை பொருள் தொடர்பில் கைது செய்யப்படுகின்றவர்கள் பாரிய தண்டனைகளுக்கு ஆளாகாமல் ஒருசில நாட்களிலேயே பிணையில் விடுதலையாகின்றார்கள் இதனால் சட்டங்கள் இருக்கமானதாக இல்லாத நிலையில் நாட்டில் போதை பொருள் பாவனை அதிகரிக்க வாய்ப்புக்கள் அதிகமாக உள்ளது.

 இந்த நிலையில் போதை பொருள் தொடர்பில் இலங்கையில் இறுக்கமான சட்டங்கள் கொண்டுவரப்படவேண்டும். அனுர அரசாங்கத்திலாவது இந்த போதை பொருள் பாவனையாளர்களுக்கு எதிராக கடுமையான சட்டங்கள் நிறைவேற்றப்படுமா? என மக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

 இதேவேளை போதை பொருள் பாவனையாளர்களுக்கு ஆதரவாக நீதிமன்றத்தில் ஆஜராகும் சட்டத்தரணிகளும் பணத்தினைப் பொருட்படுத்தாது நாட்டின் நலன்களைக் கருதி அவர்களுக்கு ஆதரவாக வாதாடுவதை தவிர்த்துக் கொண்டால் ஓரளவு இளைஞர்கள் மத்தியில் போதைப் பொருள் பாவனையை நிறுத்துவதற்கு வழிவகுத்துக்கொடுக்கலாம் என்பது திண்ணமே.

இந்த செய்தியை ஒலிவடிவில் கேட்க இந்த இணைப்பை கிளிக் செய்யவும்


உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!