HMPV வைரஸ் இலங்கையில் அவதானிக்கப்பட்டுள்ளது : அச்சம் கொள்ளத் தேவையில்லை!

#SriLanka #China #Virus
Thamilini
1 year ago
HMPV வைரஸ் இலங்கையில் அவதானிக்கப்பட்டுள்ளது : அச்சம் கொள்ளத் தேவையில்லை!

சீனாவில் பரவி வரும் HMPV வைரஸ், சில சந்தர்ப்பங்களில் இலங்கையிலும் அடையாளம் காணப்பட்ட ஒரு வைரஸ் நிலை என மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. 

 வைரஸ் தொடர்பில் தேவையற்ற அச்சத்தை ஏற்படுத்த தேவையில்லை என வைரல் நிபுணர் டாக்டர் ஜூட் ஜயமஹா சுட்டிக்காட்டியுள்ளார். 

 கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட போதே வைராலஜி நிபுணர் டாக்டர் ஜூட் ஜயமஹா இதனை தெரிவித்துள்ளார். 

இது தொடர்பில் மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,   “பொதுவாக இருமல், சளி மற்றும் லேசான காய்ச்சல் ஆகியவை இதன் அறிகுறிகளாகும்.

மேலும், நாள்பட்ட நோய்கள் உள்ளவர்கள் சுவாசக் கோளாறு மற்றும் நிமோனியாவை அனுபவிக்கலாம். ஆனால் இது மிகவும் அரிதாகவே நிகழ்கிறது மற்றும் அனைவருக்கும் நடக்காது. இது உயிரிழப்பதற்கான நிகழ்தகவு மிகவும் குறைவு.

 சில நாட்களுக்கு காய்ச்சல், இருமல் மற்றும் சளி போன்றவற்றுக்குப் பிறகு பெரும்பாலான மக்கள் குணமடைகின்றனர்” எனத் தெரிவித்துள்ளார். 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4