விருந்தோம்பல்-தோழமைக்கு மதிப்பிழந்த சுவிற்சர்லாந்து (வீடியோ இணைப்பு)

#swissnews
Mayoorikka
1 day ago
விருந்தோம்பல்-தோழமைக்கு மதிப்பிழந்த சுவிற்சர்லாந்து (வீடியோ இணைப்பு)

சுவிற்சர்லாந்துpற்கு கடந்த ஆண்டு 4 கோடிக்கு மேற்பட்ட சுற்றுலாப்பயணிகள் வந்து சென்றுள்ளனர், இருந்தபோதும் விருந்தோம்பலில் சுற்றுலா பயணிகளிடையில் சுவிற்சர்லாந்து பெருமளவு வரவேற்பைப் பெறவில்லை. 

 செழிப்பான சுற்றுலாத் துறை இருந்தபோதிலும், பன்னாடுகளுடன் ஒப்பிட்டுப்பார்த்தால் வருகை அளிக்கும் சுற்றுலாப்பயணிகள் அளவில் சுவிற்சர்லாந்து மிகுந்த சிறந்த நட்பு மற்றும் தோழமைகொண்ட விருந்தோம்பல் நாடாகக் கருதப்படுவதில்லை.

 அண்மைய கணக்கெடுப்பின் படி, உலகளாவிய தரவரிசையில் இது 53 இடங்களில் 46ஆவது இடத்தில் சுவிற்சர்லாந்து உள்ளது. வலிமைமிக்க மலைகள், அழகிய நிலப்பரப்புகள், மிகவும் அறியப்பட்ட (பிரபலமான) காட்சிகள் என சுவிற்சர்லாந்து அருகிலிருந்தும் தொலைவிலிருந்தும் விடுமுறைக்காக சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கிறது. 

சுவிஸ் சுற்றுலா சங்கத்தின் தகவலின்படி, 2023ஆம் ஆண்டில் சுவிஸ் ஹோட்டல்களில் மொத்தமாக 41.8 மில்லியன் இரவுகள் தங்கியிருக்கின்றன. இது 2022ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 9.2மூ அதிகரிப்பைக் குறிக்கிறது.


 அதற்குப் பிறகும், சுவிற்சர்லாந்து நட்புறவிலிருந்து குறைவாக மதிப்பீடுகளைப் பெற்றுள்ளது. „இன்டர்நேஷனின் எக்ஸ்பாட் (https://www.internations.org/expat-insider/)“ எனும் அமைப்பு மேற்கொண்ட ஆய்வில், சுவிற்சர்லாந்து “விருந்தோம்பலில் நட்பு - தோழமை குறைந்த நாடுகளில்” ஒன்றாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த ஆய்வில் 12,000 வெளிநாட்டினர் பங்கேற்றனர், அங்கு வாழ்க்கைத் தரம், செலவுகள், மற்றும் நட்புறவுகள் போன்ற பொருள்களும் மதிப்பீடு செய்யப்பட்டன.

 ஐரோப்பிய நாடுகள்: 

குறைந்த நட்புறவு ஐரோப்பிய நாடுகளில் ஸ்காண்டிநேவிய நாடுகள், குறிப்பாக நார்வே, பின்லாந்து, ஸ்வீடன் மற்றும் டென்மார்க், தரவரிசையில் மிகக் குறைந்த இடத்தில் உள்ளன. குறிப்பாக ஸ்டாக்ஹோம் மற்றும் ஒஸ்லோ போன்ற நகரங்களில் மக்கள் நட்பற்றவர்களாகக் இவ் ஆய்வில் சுற்றுலாப்பயணிகள் கருத்திட்டுள்ளனர்.

 யேர்மனியும், ஆஸ்திரியாவும் சுவிட்சர்லாந்தை விடவும் கேடாக கணிக்கப்பட்டுள்ளது. மொத்தத்தில், ஐரோப்பிய நாடுகள் பெரும்பாலும் தரவரிசையில் கீழ்நிலையிலேயே உள்ளன. தென் அமெரிக்கா மற்றும் ஆசியநாடுகள் சுற்றுலாப்பயணிகளின் பட்டறிவில் «நட்புறவு மற்றும் தோழமை» உணர்வில் முன்னணியில் உள்ளன. தென் அமெரிக்கா மற்றும் ஆசியாவில் உள்ள நாடுகள் விருந்தோம்பலுக்கும் நட்புறவுக்கும் பெயர் பெற்றுள்ளன. 

கோஸ்டாரிகா முதலிடத்திலும், இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ், வியட்நாம் மற்றும் தாய்லாந்து ஆகியவை முதல்பத்துகளில் உள்ளன. இந்த நாடுகள் தங்கள் மக்கள் நட்புறவுடன் பழகும் தன்மைக்காக பன்னாட்டவர்களது பாராட்டுகளைப் பெற்றுள்ளன.

 தொகுப்பு: சிவமகிழி

இந்த செய்தியை ஒலிவடிவில் கேட்க இந்த இணைப்பை கிளிக் செய்யவும்

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!