ஈபிள் கோபுரம் அருகே போராட்டத்தில் ஈடுபட்ட ஒன்பது விவசாயிகள் கைது
#Arrest
#Protest
#Farmers
#Paris
Prasu
11 months ago
ஈஃபிள் கோபுரம் அருகே உழவு இயந்திரங்கள் மூலம் அத்துமீறி நுழைந்த ஒன்பது விவசாயிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அதிகாலை 5 மணிக்கு சற்று முன்னதாக எவரும் காணாத வண்ணம் உழவு இயந்திரங்கள் மூலம் அவர்கள் பரிசுக்குள் நுழைந்து ஈஃபிள் கோபுரம் அருகே வந்துள்ளனர். பின்னர் காவல்துறையினர் அவர்களை உடனடியாக கைது செய்தனர்.
மொத்தமாக ஒன்பது பேர் கைது செய்யப்பட்டதாகவும், அவர்களில் இருவர் காவல்நிலையம் அழைத்துச் செல்லப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.