சிறைச்சாலைக்குள் வீசப்பட்ட பந்தினுள் மீட்கப்பட்ட போதைப் பொருள்!

#SriLanka
Mayoorikka
1 year ago
சிறைச்சாலைக்குள் வீசப்பட்ட பந்தினுள் மீட்கப்பட்ட போதைப் பொருள்!

காலி சிறைச்சாலைக்குள் வீசப்பட்ட டென்னிஸ் பந்து ஒன்றிலிருந்து போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக காலி பொலிஸார் தெரிவித்தனர்.

 இது தொடர்பில் தெரியவருவதாவது, இனந்தெரியாத நபரொருவர் நேற்று செவ்வாய்க்கிழமை (07) மாலை காலி சிறைச்சாலையின் கூரை வழியாக டென்னிஸ் பந்து ஒன்றை சிறைச்சாலைக்குள் வீசியுள்ளார்.

 இதனை அவதானித்த சிறைச்சாலை அதிகாரிகள் சிலர் டென்னிஸ் பந்தை சோதனையிட்டுள்ளனர்.

 இதன்போது, டென்னிஸ் பந்துக்குள் மிகவும் சூட்சுமமான முறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 50 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருளும் 20 மில்லி கிராம் ஹெரோயின் போதைப்பொருளும் சிறைச்சாலை அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளது.

 இது தொடர்பான மேலதிக விசாரணைகளை காலி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4