திருப்பதியில் கூட்ட நெரிசலில் சிக்கி 6 பக்தர்கள் மரணம்
#India
#Death
#Temple
#people
#Crowd
Prasu
17 hours ago
திருப்பதியில் வைகுண்ட ஏகாதசி சொர்க்கவாசல் பிரவேசத்திற்கு தேவஸ்தானம் சார்பில் இலவச தரிசன டோக்கன்கள் வழங்கப்பட்டன.
இந்த இலவச தரிசன டோக்கனை வாங்குவதற்காக ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்த நிலையில், அங்கு கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இந்த கூட்ட நெரிசலில் சிக்கி சேலத்தை சேர்ந்த மல்லிகா என்ற பெண் உள்பட 6 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் பலர் படுகாயங்களுடன் மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.இந்த சம்பவம் தொடர்பாக ஆந்திர முதல் மந்திரி சந்திரபாபு நாயுடு திருப்பதி தேவஸ்தான அதிகாரிகளை தொடர்பு கொண்டு விசாரித்தார்.
மேலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான உதவிகளையும், உயர்தர சிகிச்சைகளையும் வழங்க அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டுள்ளார்.