அஹுங்கல்ல பகுதியில் துப்பாக்கிச்சூடு : ஒருவர் படுகாயம்!

#SriLanka #GunShoot
Dhushanthini K
13 hours ago
அஹுங்கல்ல பகுதியில் துப்பாக்கிச்சூடு : ஒருவர் படுகாயம்!
அஹுங்கல்ல பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார்.

 இன்று (09) காலை 6.15 மணியளவில் சிவப்பு நிற ஸ்கூட்டரில் வந்த இருவர் துப்பாக்கிச் சூடு நடத்தி தப்பிச் சென்றதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் மூத்த காவல்துறை கண்காணிப்பாளர், சட்டத்தரணி புத்திக மனதுங்க தெரிவித்தார். 

 துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபர் பலபிட்டிய ஆதார மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

 காயமடைந்த நபர் "பிக் பேட்டி" என்ற குற்றவியல் கும்பல் உறுப்பினரின் உறவினர் என்றும் கூறப்படுகிறது. 

 சம்பவம் தொடர்பில் அஹுங்கல்ல பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!