பிரான்சில் 7 மாவட்டங்களுக்கு பனிப்பொழிவு மற்றும் வெள்ள அபாய எச்சரிக்கை

#France #Warning #Flood #Climate #Snow
Prasu
10 hours ago
பிரான்சில் 7 மாவட்டங்களுக்கு பனிப்பொழிவு மற்றும் வெள்ள அபாய எச்சரிக்கை

ஏழு மாவட்டங்களுக்கு பனிப்பொழிவு மற்றும் வெள்ளம் போன்ற அனர்த்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இன்று நாட்டின் வடக்குப் பகுதிகளில் பலத்த பனிப்பொழிவு பதிவாகலாம் என தெரிவிக்கப்படுகிறது.

5 தொடக்கம் 10 செ. மீ வரை பனிப்பொழிவு பதிவாகும் என Météo France எச்சரித்துள்ளது. Pas-de-Calais மற்றும் Nord மாவட்டங்களுக்கு நண்பகல் 12 மணியில் இருந்து அங்கு பனிப்பொழிவு பதிவாகும் என எச்சரிக்கப்பட்டு அவ்விரு மாவட்டங்களுக்கும் 'செம்மஞ்சள்' எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, Ille-et-Vilaine, Calvados, Eure, Seine-Maritime மற்றும் Oise ஆகிய ஐந்து மாவட்டங்களிலும் மழை கொட்டித்தீர்த்து வெள்ள அனர்த்தம் ஏற்படும் எனவும், அம்மாவட்டங்களுக்கு 'செம்மஞ்சள்' எச்சரிக்கை விடுக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!