வைகுண்ட ஏகதாசி இன்று! வழிபட்டால் வாழ்க்கை செழிக்கும் பணம் பெருகும் (வீடியோ இணைப்பு)

#spiritual
Mayoorikka
5 hours ago
வைகுண்ட ஏகதாசி இன்று!  வழிபட்டால் வாழ்க்கை செழிக்கும் பணம் பெருகும் (வீடியோ இணைப்பு)

வைகுண்ட ஏகாதசி விரதம் இந்துக்களின் மிக முக்கியமான விரதங்களில் ஒன்றாகும். அன்று சொர்க்க வாசல் திறப்பதை காண்பதும், சொர்க்க வாசல் வழியாக சென்று பெருமாளை தரிசிப்பதும் மிக மிக சிறப்பான ஒன்றாகும். 

 ஏகாதசி என்றால் தமிழில் பதினொன்று எனப்பொருள்படும். ஏகாதசி அன்று விரதம் மேற்கொள்வதை அனைத்து சாஸ்த்திரங்களும் வழியுறுத்துகின்றன. மற்ற விரதங்களைவிட ஏகாதசி விரதத்தை கடைபிடிப்பது மிக சிறப்பானதாகும். பெருமாளுக்குரிய மிக முக்கியமான விரத நாளாக இது கருதப்படுகிறது. ஒவ்வொரு மாதமும் 2 ஏகாதசி விரதங்கள் வரும். 

அனைத்து ஏகாதசிலும் விரதம் இருக்க முடியாதவர்கள், கண்டிப்பாக மார்கழி மாதம் வளர்பிறையில் வரும் வைகுண்ட ஏகாதசி அன்று விரதம் இருக்க வேண்டும். அப்படி விரதம் இருந்து வழிபட்டால் அதற்குரிய பலனை பெறுவீர்கள். 

அதாவது செய்த பாவங்கள் அனைத்தும் நீங்கி, மோட்சம் கிடைக்கும் என்ற ஒரு நம்பிக்கை ஒன்றுள்ளது. இந்த ஆண்டு வைகுண்ட ஏகாதசி விரதம் இன்று ஆகும். வைகுண்ட ஏகாதசி நாளில் எவர் ஒருவர் விரதம் இருந்து, பக்தி சிரத்தையும் பெருமாளின் திருவடிகளை கதி என்று பற்றி இருக்கிறாரோ அவருக்கு பெருமாள் பரிபூரண அருளை வழங்குவார். 

 வைணவர்கள் மட்டுமின்றி அனைவராலும் அதிகம் எதிர்பார்க்கப்படும் ஒரு புண்ணிய பலன் தரும் விரத நாள் தான் வைகுண்ட ஏகாதசி தினம். மாதந்தோறும் இரண்டு ஏகாதசி வீதம், வருடத்திற்கு 24 அல்லது 25 ஏகாதசிகள் வந்தாலும் மார்கழி மாத வளர்பிறையில் வரும் ஏகாதசியான வைகுண்ட ஏகாதசி தான் அனைத்து ஏகாதசிகளையும் விட மிக முக்கியமான விரத நாளாக கருதப்படுகிறது. 


இந்த நாளில் விரதம் இருந்து, இரவு கண் விழித்தால், பாவங்கள் நீங்கி, வைகுண்டத்தில் இடம் கிடைக்கும் என்பது நம்பிக்கை. இதனால் காலம் காலமாக வைகுண்ட ஏகாதசி விரததம் கடைபிடிப்பதை வழக்கமாக வைத்துள்ளார்கள். வைகுண்ட ஏகாதசியன்று, திருவரங்கத்தில் சொர்க்கவாசல் திறக்கப்படுகிறது. காலப்போக்கில், வைணவக்கோயில்கள் அனைத்திலும் சொர்க்க வாசல் திறப்பது ஒரு திருவிழாவாகவே நடைபெறுகிறது. 

பெருந்திரளான மக்கள் இதில் பங்கு கொள்கின்றனர். எல்லையற்ற பலன்களை வைகுண்ட ஏகாதசி விரதம் தருவதால், இவ்விரதம் மிகச் சிறப்பாக மதிக்கப்படுகிறது. எனவே காயத்ரியை விட சிறந்த மந்திரமில்லை; தாயை விட சிறந்த தெய்வமில்லை; ஏகாதசியை விட சிறந்த விரதமில்லை என்ற வழக்கும் ஏற்பட்டது. வைகுண்ட ஏகாதசி 2025

 விரதம் இருக்கும் முறை:

 வைகுண்ட ஏகாதசி விரதம் இருப்பவர்கள் ஏகாதசி திதியில் விரதத்தை தொடங்கி பிறகு அதை துவாதசி திதியில் முடிக்க வேண்டும் என்பதுதான் விதி. எனவே, ஏகாதசி விரதம் விரதம் இருப்பவர்கள் இன்று பகலில் இருந்து உணவு சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். அதற்கு பதிலாக பால் மற்றும் பழகங்கள் சாப்பிட்டு விரதத்தை தொடங்கலாம்.

ஒருவேளை உங்களால் அப்படி விரதம் இருக்க முடியவில்லை என்றால் எளிமையான உணவை மட்டும் எடுத்துக் கொள்ளுங்கள். பிறகு நாளை பகல் முழுவதும் தூங்காமல், உணவு எடுத்துக் கொள்ளாமல் விரதத்தை கடைப்பிடிக்க வேண்டும். பின் மறுநாள் காலை துவாதசியில் பாரணை செய்து விரதத்தை நிறைவு செய்யலாம். காலை 4:00 மணிக்கு பெருமாள் கோவிலில் சொர்க்கவாசல் திறக்கப்படும். எனவே அதை நீங்கள் டிவியில் அல்லது நேரில் சென்று தரிசிக்கலாம். 

முக்கியமாக வீட்டில் மாலை விளக்கேற்றி பெருமாளை வழிபட்ட பிறகு தான் விரதத்தை நிறைவு செய்ய வேண்டும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். ஆனால் வைகுண்ட ஏகாதசியின் சிறப்பே அன்றைய தினம் சொர்க்கவாசல் திறப்பை கண்ணார காண்பது தான். உங்களால் முடிந்தவரை பெருமாள் கோயிலுக்கு சென்று சொர்க்கவாசல் திறப்பதை கண்டிப்பாக தரிசனம் செய்ய முயற்சி செய்யுங்கள். நீங்கள் விரதத்தை கடைபிடிக்கும் மூன்று தினங்களும் பெருமாளின் திருநாமத்தை தொடர்ந்து சொல்வது உங்களுக்கு பல்வேறு நன்மைகளை பெற்று தரும்.

 வைகுண்டம் நல்லவர்களின் காலடி பட்டவுடன் திறந்து கொள்ளும். ஏகாதசி திதியில் முழுமையாக திறந்திருக்கும். அதற்காக, வைகுண்டத்துக்குள் எல்லாரும் புகுந்து விட முடியாது. ஏகாதசி திதியன்று உயிர் நீப்பவர்களும் கூட அவரவர் பாவ, புண்ணிய பலன்களை அனுபவித்தே தீர வேண்டும். கிராமங்களில் மக்கள் இன்று வைகுண்ட ஏகாதசி. 

இன்று இறந்தவர்களுக்கு மறுபிறவி இல்லை. இவர் பெருமாளின் பாதத்தில் போய் சேர்ந்து விட்டார், என்பதற்கு வேறு காரணம் உண்டு. வாழ்நாள் முழுவதும் இறைபக்தியுடனும், தர்ம சிந்தனையுடனும், இனிய குணத்துடனும் இருப்பவர்களே ஏகாதசியன்று மரணம் அடைவர் என்பதால் இவர் சொர்க்கத்திற்குள் செல்வது உறுதி என்பர்.

 ஏகாதசியன்று செய்யக்கூடாதது:

 ஏகாதசி திதி (முக்கியமாக வைகுண்ட ஏகாதசி) நாட்களில் தாய், தந்தைக்கு சிரார்த்தம் (நினைவுநாள்) வந்தால் அன்று நடத்தாமல் மறுநாள் துவாதசியன்று நடத்த வேண்டும். அன்று கோயில்களில் தரப்படும் பிரசாதத்தைக் கூட சாப்பிடக்கூடாது. (கூடுமானவரை கோயில்களில் பிரசாதம் கொடுப்பதைத் தவிர்க்க வேண்டும். 

குழந்தைகள், நோயாளிகள், முதியவர்களுக்கு கொடுக்கலாம்) ஏகாதசியன்று உண்ணாமல் இருப்பவர்களை கேலி செய்து அவர்களை உண்ண வைப்பவன் நரகத்திலும் மிகக்கீழான நரகத்திற்கு செல்வான். இந்நாளில் துளசி இலை பறிக்கக்கூடாது. தேவையானதை முதல்நாளே பறித்து வைத்து விட வேண்டும்.

இந்த செய்தியை ஒலிவடிவத்தில் கேட்க இந்த நீல இணைப்பை கிளிக் செய்யவும்


உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!