பிரான்சில் பனிப்பொழிவு காரணமாக இருவர் உயிரிழப்பு
#Death
#France
#Warning
#snowstorm
Prasu
4 hours ago
பனிப்பொழிவு காரணமாக இருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. Nord மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக கடுமையான பனிப்பொழிவு இடம்பெற்று வருகிறது.
ஐம்பது வயதுடைய ஒருவர் rue Jean-Jaurès எனும் வீதியில் விழுந்து காயமடைந்து பலியாகியுள்ளார். அதேவேளை, வீடற்ற ஒருவர் (SDF) உறைந்து உயிரிழந்த நிலையில், அவரது சடலமும் மீட்கப்பட்டுள்ளது.
அதேவேளை, பனிப்பொழிவு காரணமாக Nord மாவட்டத்தில் இரவு முழுவதும் 32 தடவைகள் உதவிக்குழு அழைக்கப்பட்டிருந்தனர்.
12 வீதி விபத்துக்கள் இடம்பெற்றுள்ளன. அதில் 20 பேர் காயமடைந்துள்ளனர். Nord மற்றும் பா-து-கலே மாவட்டங்களுக்கு இன்று பனிப்பொழிவு காரணமாக செம்மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலதிக செய்திகளை அறிவதற்கு இந்த நீல நிற இணைப்பினை கிளிக் செய்யவும்