கனடாவில் சிறுமியை துஷ்பிரயோகம் செய்த பாடசாலை அதிபருக்கு சிறைத்தண்டனை

#School #Arrest #Canada #Sexual Abuse #Principal
Prasu
1 year ago
கனடாவில் சிறுமியை துஷ்பிரயோகம் செய்த பாடசாலை அதிபருக்கு சிறைத்தண்டனை

கனடாவில் பாடசாலை ஒன்றின் அதிபர் தகாத செயலில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் அடிப்படையில் தண்டிக்கப்பட்டுள்ளார்.

கனடாவில் ஒன்றாரியோ மாகாணம் ஹாலிபெக்ஸில் அமைந்துள்ள பாடசாலை ஒன்றின் அதிபருக்கு இவ்வாறு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. குறித்த பாடசாலை அதிபருக்கு நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

பாலர் பாடசாலை ஒன்றின் அதிபர் பதின்ம வயது சிறுமியரை துஷ்பிரயோகம் செய்தார் என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இணைய வழியில் குறித்த அதிபர், சிறுமிகளை துப்பியோகம் செய்தார் எனவும் ஆபாச காணொளிகளை பகிர்ந்தார் எனவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

பாலியல் தூண்டல்களை மேற்கொண்டார் என இந்த பாடசாலை அதிபர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் குறித்த பாடசாலை அதிபருக்கு நீதிமன்றம் நான்கு ஆண்டு சிறை தண்டனை விதித்துள்ளது.

பிலிப்ஸ் கலஸ்கி என்ற பாடசாலை அதிபரே இவ்வாறு தண்டிக்கப்பட்டுள்ளார். 13 மற்றும் 14 வயதான சிறுமியர் இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

மோசமான படங்கள், காணொளிகளை இந்த நபர் சிறுமியருடன் பகிர்ந்து கொண்டார் எனவும் தேவையற்ற பாலியல் தூண்டல்களையும் மேற்கொண்டார் எனவும் குற்றம் சுமத்தி வழக்கு தொடரப்பட்டிருந்தது.

மேலதிக செய்திகளை அறிவதற்கு இந்த நீல நிற இணைப்பினை கிளிக் செய்யவும்

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4