ஒன்றாரியோ மாகாண மக்களுக்கு கொடுப்பனவு தொகை வழங்கும் அரசாங்கம்

#Canada #government #Tax
Prasu
1 year ago
ஒன்றாரியோ மாகாண மக்களுக்கு கொடுப்பனவு தொகை வழங்கும் அரசாங்கம்

ஒன்றாரியோ மாகாணத்தைச் சேர்ந்த மக்களுக்கு அரசாங்கம் ஒரு கொடுப்பனவு தொகையை வழங்க தொடங்கியுள்ளது.

மாகாணத்தில் வரி செலுத்தும் பிரஜைகளுக்கு இந்த கொடுப்பனவுத் தொகை செலுத்தும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே இந்த கொடுப்பனவுத் தொகை தொகைக்கான காசோலை அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மகாண அரசாங்கம் தெரிவித்துள்ளது.

கார்பன் வரிவிதிப்பு, வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு, பணவீக்கம் வட்டி வீத அதிகரிப்பு, உலக பொருளாதார நிச்சயமற்ற தன்மை போன்ற காரணிகளால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணங்களை வழங்கும் நோக்கில் அரசாங்கம் இவ்வாறு வரி செலுத்தும் பிரஜைகளுக்கு ஒரு கொடுப்பனவுத் தொகையை வழங்க தீர்மானித்துள்ளது.

இதன்படி தலா 200 டொலர்கள் இவ்வாறு அனுப்பி வைக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. 2023 ஆம் ஆண்டு 18 வயதை பூர்த்தி செய்த கனடிய பிரஜைகளுக்கு இந்த தொகை வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு கொடுப்பனவு வழங்குவதன் மூலம் அரசாங்கத்திற்கு மூன்று பில்லியன் டாலர்கள் வரையில் செலவாகும் என தெரிவிக்கப்படுகிறது.

மேலதிக செய்திகளை வீடியோவில் அறிவதற்கு இந்த நீல நிற இணைப்பினை கிளிக் செய்யவும்

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4