சுவிற்சர்லாந்தின் செயின்ட் கேலன் மாநில துணை முதல்வராக ஈழத்தமிழர் துரைராஜா ஜெயக்குமார் தெரிவு
#Switzerland
#Tamil
#DeputyChiefMinister
Prasu
4 hours ago
சுவிற்சர்லாந்தின் செயின்ட் கேலன்(St. Gallen) மாநிலத்தின் துணை முதல்வராக ஈழத்தமிழர் துரைராஜா ஜெயக்குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.
இவர், செங்காளன் நகரசபை தேர்தலில் நான்கு தடவைகள் போட்டியிட்டு தொடராக வெற்றி வாகை சூடி 09 வருடங்கள் நகரசபை உறுப்பினராக கடமையாற்றியுள்ளார்.
துரைராஜா ஜெயக்குமார் நீண்ட காலமாக சுவிஸ் நாட்டில் உள்ள பசுமைக் கட்சியில் அங்கம் வகித்து வருகிறார்.
அத்துடன், அவர் சுமார் 25 வருடங்கள் மருத்துவத் துறையில் தாதிய உத்தியோகத்தராகவும் பணியாற்றியுள்ளார்.
மேலும், செயின்ட் கேலன் வைத்தியசாலையில் தாதிய உத்தியோகத்தர்களின் குழு நிலை தலைவராகவும் துரைராஜா ஜெயக்குமார் பணியாற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலதிக செய்திகளை வீடியோவில் அறிவதற்கு இந்த நீல நிற இணைப்பினை கிளிக் செய்யவும்