இலங்கையில் இறைச்சி முட்டை நுகர்வோரின் எண்ணிக்கை வீழ்ச்சி!

#SriLanka #Chicken #Egg
Mayoorikka
1 year ago
இலங்கையில் இறைச்சி முட்டை நுகர்வோரின் எண்ணிக்கை வீழ்ச்சி!

மக்களுக்கு போதிய வருமானம் கிடைக்காத காரணத்தினால் நாளாந்த கோழி இறைச்சி விற்பனை 100 மெற்றிக் தொன்களினால் குறைந்துள்ளதாக இலங்கை கால்நடை உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் அஜித் எச்.குணசேகர தெரிவித்துள்ளார்.

 இலங்கையில் நாளாந்தம் 600 மெற்றிக் தொன் கோழி இறைச்சி விற்பனை செய்யப்பட்டாலும், தற்பொழுது நாளாந்தம் கோழி இறைச்சி விற்பனை 500 மெற்றிக் தொன் வரை குறைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். கோழிக்கறிக்கான தேவை குறைந்துள்ளதால் உறைந்த கோழி விலை கிலோ 800 ரூபாவாகக குறைந்துள்ளது.

 இந்த நாட்களில் முட்டை ஒன்றின் விலை 30 முதல் 33 ரூபா வரை குறைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். கோழி இறைச்சி மற்றும் முட்டை விலை குறைவால் கோழிப்பண்ணை உரிமையாளர்கள் உற்பத்தி செலவை ஈடுகட்ட முடியாமல் பாதிக்கப்பட்டுள்ளனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

 அதன்படி, ஒரு கிலோ கோழி இறைச்சி உற்பத்திக்கு 750 ரூபாயும், முட்டை உற்பத்தி செய்ய 34 ரூபாயும் செலவாகும் எனத் தெரிவித்துள்ளார்.

 கால்நடை தீவனத்தின் மீதான வரியை குறைக்க அரசு நடவடிக்கை எடுத்தால், நுகர்வோருக்கு குறைந்த விலையில் கோழி மற்றும் முட்டைகளை விற்பனை செய்ய முடியும் என குறிப்பிட்டுள்ளார். கோழிப்பண்ணை உரிமையாளர்கள் ஒரு முட்டைக்கு 6 ரூபாயும், ஒரு கிலோ கோழி இறைச்சிக்கு 220 ரூபாயும் அரசாங்கத்திற்கு செலுத்த வேண்டியுள்ளது என தெரிவித்துள்ளார்.

பொதுமக்கள் நன்மை கருதி லங்கா4 (Lanka4) ஊடகம் இதனை பிரசுரிக்கிறது.

மேலதிக செய்திகளை வீடியோவில் அறிவதற்கு இந்த நீல நிற இணைப்பினை கிளிக் செய்யவும்


இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4