பொலிஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட அர்ச்சுனா! மீண்டும் சிக்கலில்

#SriLanka #Police
Mayoorikka
1 year ago
பொலிஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட அர்ச்சுனா! மீண்டும் சிக்கலில்

அனுராதபுரம் - ரம்பேவ பகுதியில் போக்குவரத்து பணியில் ஈடுபட்டிருந்த பொலிஸ் அதிகாரிகள் குழுவுடன் யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

 இன்று பாராளுமன்ற அமர்விற்காக அவர் கொழும்புக்குச் சென்று கொண்டிருந்தபோது இந்த சம்பவம் இடம்பெற்றுளதாக தெரியவருகின்றது.

 சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில் தனது வாகனத்தில் விஐபி விளக்குகளைப் பயன்படுத்தி, ஏனைய வாகனங்களுக்கு இடையூறாக வாகனம் செலுத்தியதற்காக பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவின் வாகனத்தை பொலிஸார் தடுத்து நிறுத்தியுள்ளனர்.

 இதனால் கடமையில் இருந்த பொலிஸ் அதிகாரிகளுடன், பாராளுமன்ற உறுப்பினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

 அப்போது பொலிஸ் அதிகாரிகள் அவரது அடையாள அட்டை மற்றும் சாரதி அனுமதிப்பத்திரத்தை கோரியுள்ளனர்.

 இதன்போது, ஆவணங்களை வழங்க மறுத்து, பொலிஸாருக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா நடந்து கொண்டதாக தெரியவருகிறது.

பொதுமக்கள் நன்மை கருதி லங்கா4 (Lanka4) ஊடகம் இதனை பிரசுரிக்கிறது.

மேலதிக செய்திகளை வீடியோவில் அறிவதற்கு இந்த நீல நிற இணைப்பினை கிளிக் செய்யவும்



இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4