பாரிஸ் உடனான சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஒப்பந்தத்தில் இருந்து விலகிய அமெரிக்கா

#France #America #Climate #Agreement
Prasu
1 month ago
பாரிஸ் உடனான சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஒப்பந்தத்தில் இருந்து விலகிய அமெரிக்கா

சுற்றுச்சூழல் பாதுகாப்புக்காக கொண்டுவரப்பட்ட பாரிஸ் ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா வெளியேறியுள்ளது. 

ஜனாதிபதியாக பொறுப்பேற்ற டொனால்ட் ட்ரம்ப், முதலாவது நாளிலேயே இந்த ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறுவற்கான கையெழுத்திட்டார்.

முன்னதாக 2017 ஆம் ஆண்டில் டொனால்ட் ட்ரம்ப் அமெரிக்காவின் 45 ஆம் வது ஜனாதிபதியாக பொறுப்பேற்றபோதும், பாரிஸ் ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறியிருந்தார். பின்னர் ஜோ பைடன் ஜனாதிபதியான போது மீண்டும் அமெரிக்கா ஒப்பந்தத்தில் இணைந்திருந்தது. 

இந்நிலையில், மீண்டும் அமெரிக்காவின் ஜனாதிபதியாக ட்ரம்ப் பதவியேற்ற முதலாவது நாளிலேயே மீண்டும் அமெரிக்கா வெளியேறுவதாக அறிவித்தார். புவி வெப்பமடைதலை தடுக்க பல்வேறு செயற்திட்டங்களைச் செய்யவும், நிதி பங்களிப்புச் செய்யவும் பத்து வருடங்களுக்கு முன்னர் பாரிசில் வைத்து இந்த ஒப்பந்தம் உருவாக்கப்பட்டது. 

இந்த ஒப்பந்தத்தில் இருந்து ஈரான், யேமன், லிபியா போன்ற நாடுகளும் வெளியேறிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பொதுமக்களுடைய நன்மை கருதி லங்கா4 (Lanka4) ஊடகம் இச்செய்தியை பிரசுரிக்கிறது.

மேலதிக செய்திகளை வீடியோவில் அறிவதற்கு இந்த நீல நிற இணைப்பினை கிளிக் செய்யவும்

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!