தக்காளி குருமா - ஒருமுறை இப்படி செய்து பாருங்கள்!

#SriLanka #Cooking
Thamilini
1 year ago
தக்காளி குருமா - ஒருமுறை இப்படி செய்து பாருங்கள்!

தேவையான பொருள்கள்
தக்காளி -  தேவையான அளவு
மிளகாய் தூள்
மல்லித்தூள்
சீரகத்தூள்
மிளகுத்தூள்
மஞ்சள் தூள்
இஞ்சி பூண்டு பேஸ்ட்
உப்பு - தேவையான அளவு

அரைக்க -

தேங்காய் துருவல் - 3 மேஜைக்கரண்டி
சின்ன வெங்காயம் - 4
தாளிக்க -
எண்ணெய் - 3 மேஜைக்கரண்டி
வெங்காயம் - 1
கறிவேப்பிலை - சிறிது

செய்முறை -

தக்காளி, வெங்காயம் இரண்டையும் பொடிதாக நறுக்கிக் கொள்ளவும்.
தேங்காய், சின்ன வெங்காயம் இரண்டையும் மிக்ஸ்சியில் அரைத்துக் கொள்ளவும்.

அடுப்பில் கடாயை வைத்து ஒரு எண்ணையை ஊற்றி சூடானதும் வெங்காயத்தை போட்டு வதக்கவும். வெங்காயம் பொன்னிறமானதும் கறிவேப்பிலை, இஞ்சி பூண்டு கலவையை சேர்த்து வதக்கவும். 

பச்சை வாடை போனதும் தக்காளியை போட்டு வதக்கவும். நன்கு சுருள வதங்கியதும் மிளகாய் பொடி, மல்லிப்பொடி, மஞ்சள்தூள், உப்பு சேர்த்து கிளறவும்.

தக்காளி தண்ணீர் விடுவதால் தண்ணீர் சேர்க்க தேவை இல்லை. தேவைப்பட்டால் 50 மில்லி தண்ணீர் சேர்த்துக் கொள்ளவும். 

இறுதியில் மிளகுத்தூள், சீரகத்தூள் சேர்த்து கிளறி அடுப்பிலிருந்து இறக்கி விடவும். சுவையான தக்காளி குருமா ரெடி. இட்லி, தோசை, பூரி, சப்பாத்தி, சாதம் எல்லாவற்றுடன் சேர்த்து சாப்பிடலாம்."

பொதுமக்கள் நன்மை கருதி லங்கா4 (Lanka4) ஊடகம் இதனை பிரசுரிக்கிறது.

மேலதிக செய்திகளை வீடியோவில் அறிவதற்கு இந்த நீல நிற இணைப்பினை கிளிக் செய்யவும்



இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4