சிரியாவின் முன்னாள் ஜனாதிபதிக்கு எதிராக பிடியாணை பிறப்பித்த பிரான்ஸ்
போர்க்குற்றங்களில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் சிரிய ஜனாதிபதி பஷார் அல்-அசாதுக்கு எதிராக இரண்டு பிரெஞ்சு விசாரணை நீதிபதிகள் கைதாணை பிறப்பித்துள்ளனர்.
சிரியாவின் அசாதுக்கு எதிராக பிரான்சின் நீதித்துறை அதிகாரிகளின் இரண்டாவது நடவடிக்கை இதுவென்றே கூறப்படுகிறது.
கடந்த ஆண்டு இறுதியில் இஸ்லாமிய போராளிகளின் மின்னல் தாக்குதல் நடவடிக்கையை அடுத்து அசாத் பதவி நீக்கம் செய்யப்பட்டார்.
2017 ஆம் ஆண்டு சிரிய நகரமான தெராவில் நடந்த குண்டுவெடிப்புக்கு ஆயுதப்படைகளின் தலைமைத் தளபதி என்ற முறையில் அவர் பொறுப்பேற்க வேண்டும் என பிறப்பிக்கப்பட்ட கைதாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
குறித்த தாக்குதலில் பொதுமக்களில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. கொல்லப்பட்ட அந்த நபர் 59 வயதான பிரெஞ்சு ஆசிரியர் என்றும், அவர் இரட்டைக் குடியுரிமை கொண்டிருந்தார் என்றும் கூறப்படுகிறது.
வெளியான தகவலின் அடிப்படையில், இந்தத் தாக்குதலுக்கு அசாத் உத்தரவிட்டுள்ளதாகவே பிரெஞ்சு நீதித்துறை கருதுகிறது.
மேலும், 2018ல் தொடங்கிய விசாரணையில், இந்த வழக்கு தொடர்பாக ஆறு மூத்த சிரிய இராணுவ அதிகாரிகள் ஏற்கனவே பிரெஞ்சு நீதித்துறையால் கைதாணைக்கு இலக்காகியுள்ளனர்.
பொதுமக்களுடைய நன்மை கருதி லங்கா4 (Lanka4) ஊடகம் இச்செய்தியை பிரசுரிக்கிறது.
மேலதிக செய்திகளை வீடியோவில் அறிவதற்கு இந்த நீல நிற இணைப்பினை கிளிக் செய்யவும்