கனடாவில் நடந்த சாலை விபத்தில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த தந்தையும் மகளும் மரணம்

#Jaffna #Death #Canada #Accident #Road
Prasu
1 year ago
கனடாவில் நடந்த சாலை விபத்தில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த தந்தையும் மகளும் மரணம்

கனடாவில் ஒன்ராரியோ மாகாணத்தில் இடம்பெற்ற வீதி விபத்தில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த தந்தையும் மகளும் உயிரிழந்துள்ள சம்பவம் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

யாழ்ப்பாணம் நீர்வேலி பகுதியை பூர்வீகமாக கொண்ட 40 வயதான தந்தையும் 3 வயது சிறுமியுமே உயிரிழந்துள்ளனர். கனடாவில் கடும் பனிப்பொழிவும் பனியால் வீதிகள் வழுக்குவதுமாக இருக்கிறது .

இந்நிலையில் அதிவேக நெடுஞ்சாலையில் வாகனத்தில் தந்தையும் மகளும் பயணித்துக்கொண்டிருந்த வேளை ,வீதியில் வழுக்கி பள்ளத்தில் சென்று விபத்துக்குள்ளானதாக கூறப்படுகின்றது.

விபத்தை அடுத்து பதறிய தந்தை தனது மகளை வாகனத்தில் இருந்து மீட்டு , அதிவேக நெடுஞ்சாலையை கடக்க முற்பட்ட வேளை மற்றுமொரு வாகனம் அவர்கள் மீது மோதியுள்ளது. 

இதில் தந்தையும் மகளும் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். எனினும் வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி தந்தையும் மகளும் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது.

பொதுமக்களுடைய நன்மை கருதி லங்கா4 (Lanka4) ஊடகம் இச்செய்தியை பிரசுரிக்கிறது.

மேலதிக செய்திகளை வீடியோவில் அறிவதற்கு இந்த நீல நிற இணைப்பினை கிளிக் செய்யவும்

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4