பிரான்சில் திறக்கப்படவுள்ள பிரத்யேகமான சிறைச்சாலை

#France #Prison #drugs
Prasu
5 hours ago
பிரான்சில் திறக்கப்படவுள்ள பிரத்யேகமான சிறைச்சாலை

போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடுபவர்களுக்கு என பிரத்யேகமான சிறைச்சாலை ஒன்று விரைவில் திறக்கப்பட உள்ளது. இது தொடர்பில் நீதித்துறை அமைச்சர் Gérald Darmanin இன்று சில முக்கிய தகவல்களை வெளியிட்டார்.

போதைப்பொருள் கடத்தல்காரர்களையும், ஏனைய குற்றவாளிகளையும் ஒன்றாக ஒரே சிறைச்சாலையில் அடைப்பதன் ஆபத்து குறித்து Gérald Darmanin அவ்வப்போது தெரிவித்து வந்திருந்தார்.

சிறிய குற்றங்களில் ஈடுபடுபவர்களையும் பெரும் கடத்தல்காரர்களாக்கும் வாய்ப்பை சிறைச்சாலைகள் ஏற்படுத்துவதாக குற்றம் சுமத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில், வரும் ஜூலை 31 ஆம் திகதி போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு என பிரத்யேகமான தனிமைப்படுத்தப்பட்ட சிறைச்சாலைகள் திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அதில் மிக முக்கிய குற்றவாளிகள் என அடையாளம் காணப்பட்ட 100 கடத்தல்காரர்கள் தனிமைப்படுத்தப்பட்டு சிறைவைக்கப்படுவார்கள் என Gérald Darmanin தெரிவித்தார்.

பொதுமக்களுடைய நன்மை கருதி லங்கா4 (Lanka4) ஊடகம் இச்செய்தியை பிரசுரிக்கிறது.

மேலதிக செய்திகளை வீடியோவில் அறிவதற்கு இந்த நீல நிற இணைப்பினை கிளிக் செய்யவும்

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!