கொள்கையை மீறுகிறதா NPP அரசு? இந்துக் கல்லூரி குறும் பட ஆரம்பத்தில் சந்திரசேகர்

#SriLanka #PrimeMinister #AnuraKumaraDissanayake #NationalPeople'sPower
Prasu
1 year ago
கொள்கையை மீறுகிறதா NPP அரசு? இந்துக் கல்லூரி குறும் பட ஆரம்பத்தில் சந்திரசேகர்

“சிஸ்ரம் சேஞ்” என்று கூறி கடந்த காலங்கள் போலில்லாது இனிவருங்காலத்தில் குறிப்பாக தமது ஆட்சிக்காலத்தில் பாடசாலை நிகழ்வுகளுக்கு அரசியல்வாதிகளை அழைப்பைதை நிறுத்தவும் என கடந்த வருடம் செப்டம்பர் மாதம் 26 ஆம் திகதி இலங்கையின் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய கல்வி அமைச்சின் அனைத்து அதிகாரிகளுடன் கலந்துரையாடலில் பணித்திருந்தார்.

அதுமட்டுமல்லாது மக்கள் பிரதிநிதிகளை பாடசாலைகளுக்கு அழைத்துவருவது உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் எனவும் உறுதியாகத் தெரிவித்திருந்தார். ஆனால் பிரதமரின் இந்த கூற்றம் தற்போது காற்றில் பறக்கவிடப்பட்டுள்ளதாகவே தெரிகின்றது.

யாழ் இந்துக்கல்லுாரிக்கு அரசாங்கத்தின் குறிப்பாக யாழ்ப்பாணத்தின் ஒட்டுமொத்த விடயங்களிலும் அதிகாரத்தை செலுத்தும் கடற்றொழில் அமைச்சர் குறும்படம் எடுத்தல் என்ற போர்வையில் யாழ் இந்துக்கல்லுாரி அதிபரால் அழைக்கப்பட்டு பாடசாலை நிகழ்வில் பங்கேற்றுள்ளார்.

இந்த சம்பவமானது அனுர அரசின் தடுமாறும் கொள்கையையும் பலவினமான செயற்பாடுகளையும் காண்பிப்பதுடன் மக்களின் எதிர்பார்ப்புகளை கண்டுகொள்ளாது மக்களை ஏமாற்றுவதற்கான ஒரு புள்ளியாகவும் பார்க்கப்படுகின்றது.

பொதுமக்களுடைய நன்மை கருதி லங்கா4 (Lanka4) ஊடகம் இச்செய்தியை பிரசுரிக்கிறது.

மேலதிக செய்திகளை வீடியோவில் அறிவதற்கு இந்த நீல நிற இணைப்பினை கிளிக் செய்யவும்

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4