மன்னார் படுகொலை: கைதானவர்கள் தொடர்பில் வெளியான தகவல்

#SriLanka #Mannar #Arrest #Crime
Mayoorikka
1 year ago
மன்னார் படுகொலை: கைதானவர்கள் தொடர்பில் வெளியான தகவல்

மன்னார் நீதவான் நீதிமன்ற வளாகத்தில் இருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தில் கைது செய்யப்பட்டுள்ள 5 சந்தேகநபர்களும் எதிர்வரும் 29ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

 அதேநேரம் குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் மன்னாரைச் சேர்ந்த 34 வயதுடைய கடற்றொழிலாளர் நேற்று கைது செய்யப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

 குறித்த கொலை சம்பவத்துக்கு உதவி ஒத்தாசை வழங்கிய குற்றச்சாட்டில் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 மன்னார் நீதவான் நீதிமன்ற வளாகத்தில் கடந்த 16ஆம் திகதி உந்துருளியில் பிரவேசித்த இருவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இருவர் கொல்லப்பட்டதுடன் இருவர் காயமடைந்தனர்.

பொதுமக்களுடைய நன்மை கருதி லங்கா4 (Lanka4) ஊடகம் இச்செய்தியை பிரசுரிக்கிறது.

மேலதிக செய்திகளை வீடியோவில் அறிவதற்கு இந்த நீல நிற இணைப்பினை கிளிக் செய்யவும்



இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4