தேங்காய் நெருக்கடியைத் தவிர்ப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை

#SriLanka
Mayoorikka
1 year ago
தேங்காய் நெருக்கடியைத் தவிர்ப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை

எதிர்வரும் மாதங்களில், பாரிய தேங்காய் நெருக்கடியைத் தவிர்ப்பதற்காக, கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சி அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துநெத்தி மற்றும் பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சர் கே.வி.சமந்த வித்யாரத்ன ஆகியோர், தேங்காய் தொடர்பான பொருட்களை அவசரமாக இறக்குமதி செய்வதற்கான கூட்டு அமைச்சரவை பத்திரத்தை அடுத்த வாரம் சமர்ப்பிக்கவுள்ளனர். 

 தற்போது கடும் தட்டுப்பாடு நிலவும் தேங்காய்களுக்கு மாற்றாக, தேங்காய் இறக்குமதிக்கு பொருந்தக்கூடிய நிபந்தனைகள் குறித்து உரிய அதிகாரிகள் ஆய்வு நடத்த வேண்டும் என அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

 தற்போதைய நெருக்கடிக்கு உதவுவதற்காக ரஷ்யாவிடமிருந்து 55,000 டொன் உரங்கள் நன்கொடையாக பெறப்பட்டதாகும், அதில் தேயிலை உற்பத்திக்கும் பாதி தேங்காய் உற்பத்திக்கும் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், தெங்கு அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் சாந்த ரணதுங்க தெரிவித்தார்.

பொதுமக்களுடைய நன்மை கருதி லங்கா4 (Lanka4) ஊடகம் இச்செய்தியை பிரசுரிக்கிறது.

மேலதிக செய்திகளை வீடியோவில் அறிவதற்கு இந்த நீல நிற இணைப்பினை கிளிக் செய்யவும்


இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4