தமிழரசுக்கட்சியின் 03 மாவட்டங்களை சேர்ந்த உறுப்பினர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை!

#SriLanka #Batticaloa #Vavuniya #Ampara
Thamilini
1 year ago
தமிழரசுக்கட்சியின் 03 மாவட்டங்களை சேர்ந்த உறுப்பினர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை!

இலங்கைத் தமிழரசுக்கட்சியில் மட்டக்களப்பு, முல்லைத்தீவு, வவுனியா ஆகிய மூன்று மாவட்டங்களைச் சேர்ந்த 28பேருக்கு எதிராக இதுவரையில் ஒழுக்காற்று நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினருமான வைத்தியர்.ப.சத்தியலிங்கம் தெரிவித்தார்.

அத்துடன்  ஐந்து மாவட்டங்களின் பட்டியல்கள் இன்னமும் கிடைக்கவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். 

 இலங்கைத் தமிழரசுக்கட்சியின் மத்திய செயற்குழுக்கூட்டத்தின் தீர்மானத்துக்கு அமைவாக, கட்சியின் தீர்மானத்துக்கு எதிராகவும், கட்சிக்கு எதிராகவும் கடந்த ஜனாதிபதி, மற்றும் பாராளுமன்ற தேர்தல்களின்போது செயற்பட்டவர்கள் தொடர்பில் ஆராய்ந்து மேற்படி ஒழுக்காற்று நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 

இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள கட்சியின் பதில் பொதுச் செயலாளர், வவுனியாவிலும், திருகோணமலையிலும் நடைபெற்ற மத்திய செயற்குழுக் கூட்டங்களின்போது எடுக்கப்பட்ட தீர்மானங்களுக்கு அமைவாக, வைத்தியர் சிவமோகன் கட்சியிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளார். 

 பா.அரியநேத்திரன் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். கே.வி.தவராசா, மிதிலைச்செல்வி ஆகியோர் கட்சியிருந்து விலகுவதாக அறிவித்துள்ளனர்.

 இவ்வாறான நிலையில், கட்சியின் தீர்மானங்களுக்கு எதிராகவும், கட்சிக்கு எதிராகவும் செயற்பட்டவர்கள் தொடர்பில் ஒழுக்காற்று நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

தற்போது வரையில் மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த 14பேருக்கு எதிராகவும், முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த 12பேருக்கு எதிராகவும், வவுனியா மாவட்டத்தினைச் சேர்ந்த இருவருக்கு எதிராகவும் ஒழுக்காற்று நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. 

அவர்களிடத்தில் விளக்கமளிப்புக்கான எழுத்துமூலமான கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன” எனத் தெரிவித்துள்ளார். 


பொதுமக்களுடைய நன்மை கருதி 
லங்கா4 (Lanka4) ஊடகம் இச்செய்தியை பிரசுரிக்கிறது.

மேலதிக செய்திகளை வீடியோவில் அறிவதற்கு இந்த நீல நிற இணைப்பினை கிளிக் செய்யவும்


இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4