மொனராகலையில் மின் தூண் விழுந்து மூவர் படுகாயம்!

#SriLanka #Accident #Electric
Thamilini
1 year ago
மொனராகலையில் மின் தூண் விழுந்து மூவர் படுகாயம்!

மொனராகலை, செவனகல பகுதியில் மின்சார தூண் ஒன்று உடைந்து விழுந்ததில் எம்பிலிபிட்டிய அலுவலகத்தில் பணிபுரியும் மின்சார சபையின் மூன்று ஊழியர்கள் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

 அவர்களில் ஒருவரின் நிலை கவலைக்கிடமானதால் எம்பிலிபிட்டிய மாவட்ட வைத்தியசாலையில் இருந்து கராபிட்டிய தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

 குறித்த ஊழியர்கள் மின்சார தூண்களை பொருத்திக் கொண்டிருந்த போது இந்த விபத்து நிகழ்ந்தது.

 ஒரு ஊழியர் ஒரு மின் கம்பத்தின் மேல் நின்று மின் கம்பிகளைப் பொருத்திக் கொண்டிருந்தபோது, ​​அந்தக் தூணின் நடுப்பகுதி உடைந்து தரையில் விழுந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


பொதுமக்களுடைய நன்மை கருதி லங்கா4 (Lanka4) ஊடகம் இச்செய்தியை பிரசுரிக்கிறது.

மேலதிக செய்திகளை வீடியோவில் அறிவதற்கு இந்த நீல நிற இணைப்பினை கிளிக் செய்யவும்



இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4