மக்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்த சாத்தியமான அனைத்து முடிவுகளையும் எடுப்போம் - ஜனாதிபதி!

#SriLanka #AnuraKumaraDissanayake
Thamilini
1 year ago
மக்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்த சாத்தியமான அனைத்து முடிவுகளையும் எடுப்போம் - ஜனாதிபதி!

நாட்டை முன்னேற்றுவதற்கும் மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்கும் தற்போதைய அரசாங்கம் சாத்தியமான அனைத்து முடிவுகளையும் எடுக்கும் என்று ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க கூறுகிறார்.

சர்வதேச சுங்க தினத்தை முன்னிட்டு நேற்று (27) பிற்பகல் சுங்கத் திணைக்கள கேட்போர் கூடத்தில் நடைபெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இந்தக் கருத்துக்களைத் தெரிவித்தார்.

இந்த ஆண்டு சர்வதேச சுங்க தினம் "ஒரு வளமான தேசத்தை உருவாக்க ஒரு பயனுள்ள சுங்கத் துறை" என்ற கருப்பொருளின் கீழ் கொண்டாடப்படுகிறது.

இதில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்டுள்ள அவர்,  இலங்கை சுங்கம், கலால் துறை மற்றும் உள்நாட்டு வருவாய் துறைகளில் காலத்திற்கு ஏற்ற நிறுவன கட்டமைப்பை உருவாக்க கட்டமைப்பு சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்படும் என்று ஜனாதிபதி தெரிவித்தார்.

எந்தவொரு சட்டமோ அல்லது நிறுவனமோ என்றென்றும் ஒரே மாதிரியாக இருக்க முடியாது என்றும், காலத்தின் சவால்களுக்கு ஏற்ப ஒரு சட்டம் அல்லது நிறுவனம் மாற வேண்டும் என்றும் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.

பொதுமக்களுடைய நன்மை கருதி லங்கா4 (Lanka4) ஊடகம் இச்செய்தியை பிரசுரிக்கிறது.

மேலதிக செய்திகளை வீடியோவில் அறிவதற்கு இந்த நீல நிற இணைப்பினை கிளிக் செய்யவும்




இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4