யாழில் புதிய அரசியலமைப்பு சீர்திருத்தம் தொடர்பாக சமூகத்திற்கு தெளிவூட்டும் கலந்துரையாடல்!
#SriLanka
#Jaffna
Mayoorikka
11 months ago
புதிய அரசியலமைப்பு சீர்திருத்தம் தொடர்பாக சமூகத்திற்கு தெளிவூட்டும் முனைப்பில், ஊடகவியலாளர்களுடனான சந்திப்பு ஒன்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியால் இன்றையதினம்(28) யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

குறித்த கலந்துரையாடலில் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரன் உள்ளிட்ட பிரமுகர்கள், ஊடகவியலாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டிருந்தனர்.
பொதுமக்களுடைய நன்மை கருதி லங்கா4 (Lanka4) ஊடகம் இச்செய்தியை பிரசுரிக்கிறது.
மேலதிக செய்திகளை வீடியோவில் அறிவதற்கு இந்த நீல நிற இணைப்பினை கிளிக் செய்யவும்
