காதல் வலையில் சிக்கி வாழ்க்கையை இழக்கும் சிறுவர்கள் : 213 கர்ப்ப சம்பவங்கள் பதிவு’!

#SriLanka #children #Abuse #Pregnant
Thamilini
1 year ago
காதல் வலையில் சிக்கி வாழ்க்கையை இழக்கும் சிறுவர்கள் : 213 கர்ப்ப சம்பவங்கள் பதிவு’!

இலங்கையில் 2024 ஆம் ஆண்டில் குழந்தை கர்ப்ப சம்பவங்கள் 213 ஆக அதிகரித்துள்ளதாக குழந்தைகள் மற்றும் பெண்கள் துஷ்பிரயோக விசாரணைப் பிரிவின் பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரேணுகா ஜெயசுந்தர தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில்  கருத்து வெளியிட்டுள்ள அவர், 2023 ஆம் ஆண்டில் 167 குழந்தை கர்ப்பங்கள் பதிவாகியுள்ளதாகவும், 2024 ஆம் ஆண்டில் இது அதிகரித்துள்ளதாகவும் கூறினார்.

 2023 மற்றும் 2024 ஆண்டுகளை ஒப்பிடும்போது குழந்தை துஷ்பிரயோக சம்பவங்களில் எந்த வித்தியாசமும் இல்லை என்றும் அவர் கூறினார்.

 இலங்கையில் அதிகம் பதிவான பாலியல் துஷ்பிரயோகம் காதல் உறவில் நிகழும் 16 வயதுக்குட்பட்ட பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமையாகும். இதுவே அதிகம் பதிவாகியுள்ளது” எனத் தெரிவித்துள்ளார். 

பொதுமக்களுடைய நன்மை கருதி லங்கா4 (Lanka4) ஊடகம் இச்செய்தியை பிரசுரிக்கிறது.

மேலதிக செய்திகளை வீடியோவில் அறிவதற்கு இந்த நீல நிற இணைப்பினை கிளிக் செய்யவும்


இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4