அடுத்த வரவு செலவு திட்டத்தில் அரச ஊழியர்களின் அடிப்படை சம்பளத்தை உயர்த்த முன்மொழிவு!

#SriLanka #AnuraKumaraDissanayake
Thamilini
1 year ago
அடுத்த வரவு செலவு திட்டத்தில் அரச ஊழியர்களின் அடிப்படை சம்பளத்தை உயர்த்த முன்மொழிவு!

எதிர்வரும் வரவு செலவுத் திட்டம் மற்றும் அரசாங்கத்தின் பொருளாதார வேலைத்திட்டம் குறித்து தேசிய தொழிற்சங்க மையத்துடன் இணைந்த தொழிற்சங்கங்களுக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. 

 நேற்று (29) அலரி மாளிகையில் நடைபெற்ற இந்தக் கலந்துரையாடலில் தேசிய தொழிற்சங்க மையத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பல தொழிற்சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. 

இதன்போது  தற்போதைய அரசாங்கத்தின் பொருளாதார வேலைத்திட்டம் மற்றும் எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தில் அரச ஊழியர்களுக்கு வழங்கப்படும் நிவாரணங்கள் குறித்து நீண்ட கலந்துரையாடல் இடம்பெற்றதாக தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சந்தன சூரியாராச்சி தெரிவித்தார்.

 வரவு செலவுத் திட்டத்தில் அரச ஊழியர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்குப் பதிலாக அடிப்படை சம்பளத்தை அதிகரிப்பது தொடர்பான யோசனைகள் முன்வைக்கப்பட்டதாக  சந்தன சூரியராச்சி மேலும் தெரிவித்தார்.

பொதுமக்களுடைய நன்மை கருதி லங்கா4 (Lanka4) ஊடகம் இச்செய்தியை பிரசுரிக்கிறது.

மேலதிக செய்திகளை வீடியோவில் அறிவதற்கு இந்த நீல நிற இணைப்பினை கிளிக் செய்யவும்



இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4