மாவைக்கு ஜனாதிபதி நேரில் சென்று அஞ்சலி செலுத்தவுள்ளதாக தகவல்!

#SriLanka #President Anura
Mayoorikka
1 year ago
மாவைக்கு ஜனாதிபதி நேரில்  சென்று அஞ்சலி செலுத்தவுள்ளதாக தகவல்!

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மூத்த உறுப்பினரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான மறைந்த மாவை சேனாதிராஜாவுக்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நேரில் சென்று அஞ்சலி செலுத்தவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

 உடல் நலக்குறைவினால் நேற்றிரவு உயிரிழந்த மாவை சேனாதிராஜாவின் பூதவுடல் மக்கள் அஞ்சலிக்காக மாவிட்டபுரத்திலுள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது.

 இந்த நிலையில் நாளைய தினம் யாழ்ப்பாணத்திற்கு வருகை தரவுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, மாவை சேனாதிராஜாவின் வீடடுக்குச் சென்று அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்துவார் என தெரிவிக்கப்படுகின்றது.

 அத்துடன் இதற்கான முன்னேற்பாடுகளில் பாதுகாப்பு வட்டாரங்கள் ஈடுபட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. இதேவேளை அநுரகுமார திசாநாயக்க மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம், பொதுமக்கள் சந்திப்பு என சில நிகழ்வுகளில் பங்கேற்பதற்காக நாளை யாழ்ப்பாணத்திற்கு வருகை தரவுள்ளார்.

பொதுமக்களுடைய நன்மை கருதி லங்கா4 (Lanka4) ஊடகம் இச்செய்தியை பிரசுரிக்கிறது.

மேலதிக செய்திகளை வீடியோவில் அறிவதற்கு இந்த நீல நிற இணைப்பினை கிளிக் செய்யவும்


இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4