குறைந்த விலையில் ஜப்பான் வாகனங்களை இறக்குமதி செய்ய நடவடிக்கை!

#SriLanka #Japan
Mayoorikka
1 year ago
குறைந்த விலையில் ஜப்பான் வாகனங்களை இறக்குமதி செய்ய நடவடிக்கை!

தனியார் வாகனங்களை இறக்குமதி செய்ய அரசாங்கம் அனுமதி வழங்குமாக இருந்தால், ஜப்பானில் பயன்படுத்திய வாகனங்களை குறைந்த விலையில் நாட்டுக்கு இறக்குமதி செய்ய முடியும் என வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

 நாட்டுக்கு வாகனங்களை இறக்குமதி செய்வது தொடர்பான வர்த்தமாணி அறிவித்தல் ஒன்றை அரசாங்கம் கடந்த சில நாட்களுக்கு முன்னர் வெளியிட்டிருந்தது. எனினும், தனியார் வாகனங்களை இறக்குமதி செய்ய இதில் அனுமதிக்கப்படவில்லை.

 இந் நிலையில், தனியார் வாகனங்களையும் இறக்குமதி செய்ய அரசாங்கம் அனுமதி வழங்குமாக இருந்தால், ஜப்பான் நாட்டின் பயன்படுத்திய வாகனங்களை குறைந்த விலையில் நாட்டுக்குள் கொண்டுவர முடியும் என்று வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

 இதனை ஒரு யோசனையாக அரசாங்கத்திடம் முன்வைப்பதாக வாகன இறக்குமதியாளர் சங்கத்தின் மூத்த ஆலோசகர் ஜகன் ராமநாயக்க தெரிவித்துள்ளார்.

 எவ்வாறாயினும், எதிர்காலத்தில் ஜப்பானில் 4 அல்லது 5 ஆண்டுகள் பயன்படுத்தப்பட்ட வாகனங்களை அரசாங்கம் இறக்குமதி செய்யும் என எதிர்பார்ப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

பொதுமக்களுடைய நன்மை கருதி லங்கா4 (Lanka4) ஊடகம் இச்செய்தியை பிரசுரிக்கிறது.

மேலதிக செய்திகளை வீடியோவில் அறிவதற்கு இந்த நீல நிற இணைப்பினை கிளிக் செய்யவும்


இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4