வரலாற்றில் இன்று உலகில் என்னவெல்லாம் நடந்தது? பெப்ரவரி 01 (February 01)

#people #history #Lanka4
Prasu
1 year ago
வரலாற்றில் இன்று உலகில் என்னவெல்லாம் நடந்தது? பெப்ரவரி 01 (February 01)


கிரிகோரியன் ஆண்டின் 32 ஆம் நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 333 (நெட்டாண்டுகளில் 334) நாட்கள் உள்ளன.

நிகழ்வுகள்
  • 1327 – பதின்ம வயது மூன்றாம் எட்வர்டு இங்கிலாந்தின் மன்னனாக முடிசூடினான். ஆனால் அவனது தாய் இசபெல்லாவும் தாயின் காதலன் ரொஜர் மோர்ட்டிமரும் நாட்டை ஆண்டனர்.
  • 1329 – பொகேமியா மன்னர் ஜான் லித்துவேனியாவில் முக்கிய கோட்டையைக் கைப்பற்றி, அதன் 6,000 பாதுகாப்புப் படையினரை திருமுழுக்கிட்டான்.
  • 1662 – ஒன்பது-மாத முற்றுகையின் பின்னர் சீனத் தளபதி கோசிங்கா தைவான் தீவைக் கைப்பற்றினான்.
  • 1788 – ஐசாக் பிறிக்ஸ், வில்லியம் லோங்ஸ்ட்ரீட் ஆகியோர் நீராவிப்படகுக்கான காப்புரிமம் பெற்றனர்.
  • 1793 – பிரெஞ்சுப் புரட்சிப் போர்கள்: ஐக்கிய இராச்சியம் மற்றும் நெதர்லாந்து மீது பிரான்சு போரைத் தொடுத்தது.
  • 1814 – பிலிப்பீன்சில் மயோன் எரிமலை வெடித்ததில் 1,200 பேர் உயிரிழந்தனர்.
  • 1832 – ஆசியாவின் முதலாவது அஞ்சல் வண்டி சேவை (mail-coach) இலங்கையில் கண்டியில் ஆரம்பமாகியது.[1]
  • 1835 – மொரிசியசில் அடிமை வணிகம் ஒழிக்கப்பட்டது.
  • 1861 – அமெரிக்க உள்நாட்டுப் போர்: டெக்சசு மாநிலம் ஐக்கிய அமெரிக்காவில் இருந்து விலகியது.
  • 1864 – டென்மார்க்-புரூசியா போர் ஆரம்பமானது.
  • 1880 – யாழ்ப்பாணத்திற்கும் பருத்தித்துறைக்கும் இடையில் முதலாவது தபால் வண்டி சேவையை ஆரம்பித்தது.[1]
  • 1884 – ஒக்ஸ்ஃபோர்ட் ஆங்கில அகராதியின் முதற் பதிப்பு வெளியானது.
  • 1893 – தாமசு ஆல்வா எடிசன் தனது முதலாவது அசையும் படத்துக்கான படப்பிடிப்பகத்தை நியூ ஜேர்சியில் மேற்கு ஒரேஞ்சு நகரில் கட்டி முடித்தார்.
  • 1908 – போர்த்துக்கல் மன்னன் முதலாம் கார்லோசு, அவனது மகன் இளவரசர் லூயிஸ் பிலிப் ஆகியோர் லிஸ்பன் நகரில் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
  • 1918 – உருசியா ஜூலியன் நாட்காட்டியில் இருந்து கிரிகோரியன் நாட்காட்டிக்கு மாறியது.
  • 1924 – சோவியத் ஒன்றியத்தை ஐக்கிய இராச்சியம் அங்கீகரித்தது.
  • 1942 – அமெரிக்க அரசின் அதிகாரபூர்வ வெளிநாட்டு வானொலி வாய்ஸ் ஆஃப் அமெரிக்கா அச்சு நாடுகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் தனது ஒலிபரப்பு சேவையை ஆரம்பித்தது.
  • 1946 – நோர்வேயின் திறிகுவே இலீ ஐக்கிய நாடுகள் சபையின் முதலாவது பொதுச் செயலராகத் தெரிவு செய்யப்பட்டார்.
  • 1946 – அங்கேரி நாடாளுமன்றம் ஒன்பது நூற்றாண்டுப் பழமையான மன்னராட்சியை நீக்கி குடியரசாக அறிவித்தது.
  • 1953 – வடகடல் வெள்ளப்பெருக்கு நெதர்லாந்து, பெல்ஜியம், ஐக்கிய இராச்சியம் ஆகிய நாடுகளைத் தாக்கியது.
  • 1958 – எகிப்து மற்றும் சிரியா ஆகியன இணைந்து 1961 வரையில் ஐக்கிய அரபுக் குடியரசு என ஒரு நாடாக இயங்கின.
  • 1972 – கோலாலம்பூர் மலேசியாவின் மன்னரால் மாநகரமாக அறிவிக்கப்பட்டது.
  • 1974 – பிரேசிலில் சாவோ பாவுலோ நகரில் 25-மாடிக் கட்டடம் ஒன்றில் தீப்பற்றியதில் 189 பேர் உயிரிழந்தனர், 293 பேர் காயமடைந்தனர்.
  • 1979 – 15 ஆண்டுகள் நாடு கடந்த நிலையில் வாழ்ந்த ஈரானின் மதத்தலைவர் அயத்தொல்லா கொமெய்னி தெகுரான் திரும்பினார்.
  • 1991 – லாசு ஏஞ்சலசு பன்னாட்டு வானூர்தி நிலைய ஓடுபாதையில் இரண்டு விமானங்கள் மோதியதில் 34 பேர் உயிரிழந்தனர், 30 பேர் காயமடைந்தனர்.
  • 1992 – போபால் பேரழிவு: யூனியன் கார்பைட்டின் முன்னாள் முதன்மைச் செயலர் வாரன் அண்டர்சன் ஒரு தலைமறைவான குற்றவாளி என போபால் நீதிமன்றம் அறிவித்தது.
  • 1998 – கிளிநொச்சித் தாக்குதல், 1998: கிளிநொச்சி நகரம் மீதான விடுதலைப் புலிகளின் தாக்குதல் ஆரம்பமாகியது.
  • 2002 – சனவரி 23 இல் கடத்தப்பட்ட அமெரிக்க ஊடகவியலாளர் டேனியல் பெர்ல் கடத்தல்காரர்களால் கழுத்து துண்டிக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டார்.
  • 2003 – கொலம்பியா விண்ணோடம் பூமியின் வளிமண்டலத்தினுள் வெடித்துச் சிதறியதில் இந்திய விண்வெளி வீராங்கனை கல்பனா சாவ்லா உட்பட ஏழு பேர் உயிரிழந்தனர்.
  • 2004 – சவூதி அரேபியாவில் ஹஜ் பயணத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 251 பேர் உயிரிழந்தனர், 244 பேர் காயமடைந்தனர்.
  • 2005 – நேபாள மன்னர் ஞானேந்திரா இராணுவப் புரட்சி ஒன்றை நடத்தி நாடாளுமன்றத்தைக் கலைத்து நாட்டைத் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தார்.
  • 2005 – கனடா சமப்பால் திருமணத்தை சட்டபூர்வமாக்கிய நான்காவது நாடானது.
  • 2007 – மட்டக்களப்பு வந்தாறுமூலையில் இடம்பெற்ற கிளைமோர் குண்டுத் தாக்குதலில் பேருந்து ஒன்று சிக்கியதில் 2 அதிரடிப்படையினர் 6 காவற்துறையினர் உட்பட 11 பேர் கொல்லப்பட்டனர்.
  • 2012 – எகிப்தில் கால்பந்து அரங்கு ஒன்றில் இரண்டு அணி ரசிகர்களிடையே இடம்பெற்ற மோதலில் 74 பேர் உயிரிழந்தனர்.
  • 2013 – ஐரோப்பிய ஒன்றியத்தில் மிக உயரமான கட்டடம் ஷார்டு பொதுமக்களுக்காகத் திறக்கப்பட்டது.
  • 2021 – மியான்மர் இராணுவப் புரட்சியில் ஆங் சான் சூச்சி கைது செய்யப்பட்டார். இராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியது.
பிறப்புகள்
  • 1707 – பிரெடரிக், வேல்சு இளவரசர், (இ. 1751)
  • 1844 – கிரான்வில் ஸ்டான்லி ஹால், அமெரிக்க உளவியலாளர் (இ. 1924)
  • 1873 – பம்மல் சம்பந்த முதலியார், தமிழ் நாடகத் தந்தை (இ. 1964)
  • 1894 – ஜான் போர்டு, அமெரிக்க இயக்குநர், தயாரிப்பாளர் (இ. 1973)
  • 1901 – கிளார்க் கேபிள், அமெரிக்க நடிகர் (இ. 1960)
  • 1902 – லாங்ஸ்ரன் ஹியூஸ், அமெரிக்கக் கவிஞர் (இ. 1967)
  • 1905 – எமீலியோ சேக்ரே, நோபல் பரிசு பெற்ற இத்தாலிய-அமெரிக்க இயற்பியலாளர் (இ. 1989)
  • 1930 – இந்தர் மல்கோத்ரா, இந்திய இதழாளர், நூலாசிரியர் (இ. 2016)
  • 1931 – போரிஸ் யெல்ட்சின், உருசியாவின் 1வது அரசுத்தலைவர் (இ. 2007)
  • 1936 – பொ. ம. இராசமணி, தமிழகத் தமிழறிஞர் (இ. 2009)
  • 1957 – ஜாக்கி செராப், இந்திய நடிகர்
  • 1961 – செ. குரு, தமிழக அரசியல்வாதி (இ. 2018)
  • 1982 – சோயிப் மாலிக், பாக்கித்தானியத் துடுப்பாட்ட வீரர்
  • 1985 – கோபிகா, தென்னிந்தியத் திரைப்பட நடிகை
  • 1992 – வைதேகி பரசுராமி, மராத்தி நடிகை

பொதுமக்களுடைய நன்மை கருதி லங்கா4 (Lanka4) ஊடகம் இச்செய்தியை பிரசுரிக்கிறது.

மேலதிக செய்திகளை வீடியோவில் அறிவதற்கு இந்த நீல நிற இணைப்பினை கிளிக் செய்யவும்

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4